காதலிப்பது வேதத்தின் அடிப்படையில் சரியான செயலல்ல என்பதை கடந்த பதிவில் நாம் பார்த்தோம்.
முந்தைய பதிவை பார்க்க இதை கிளிக் செய்யவும் .
நாகரீகமான நல்ல அனுபவமுள்ள மனிதர்களே காதலை எதிர்க்கும்பொழுது தேவன் அதை அங்கீகரிக்கவா செய்வார்? வாலிப வயதில் காதலில் மூழ்கி முத்தெடுத்தவர்கள் கூட பிற்காலத்தில் அது வெறும் மாயை என்று ஒத்துக்கொள்கிறார்கள்!வாலிப வயதில் எல்லோருக்குமே காதல் உணர்வு இருக்கும். அது இயற்கையாய் தேவன் கொடுத்தது. ஆனால் அதிலே நாம் சிக்கிக் கொள்ளக்கூடாது.ஒருமுறை ஒரு வாலிபன் தேவனிடம் ஜெபித்தானாம்,“ஆண்டவரே உம் சித்ததின்படியான மணமகளை எனக்குத்; தாரும்.ஆனால் உம் சித்தம் எதிர்த்த வீட்டு எஸ்தராக இருக்கட்டும்”என்று. தேவனிடம் போய் அந்த பெண் (அ) ஆண் என்னை நேசிக்க உதவி செய்யும் என்று சொல்வதை விட தேவனே நான் உம்மை நேசிக்கிறேன் என்பது அவரை எவ்வளவு பிரியப்படுத்தும்!
நம்முடைய பெற்றோருக்கு பயந்து நாம் செய்கின்ற காரியங்கள் பொதுவாகவே தவறானதாகத் தான் இருக்கும். (உதாரணம்: பீடி,சாராயம் போன்ற பழக்கங்கள்) அந்த வகையில் காதலும் இடம்பெறுவதால் இது தவறென காதல் சரியென வாதிடுவோருக்கும் தெரிந்திருக்கும். காதல் சரியாக இருந்தால் அதை பயந்து பயந்து செய்ய வேண்டிய அவசியமே இல்லை. எத்தனை பேர் “அம்;மா நா இன்னக்கி என் ஆளோட ஷாப்பிங் போறேன்.வர லேட்டாகும்” என்று அம்மாவின் அனுமதியோடு செல்ல முடியும். அம்மா அப்பாவுக்கு தெரியாமல் செய்வதற்கு காரணம், தெரிந்தால் அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் அனுமதிக்காததற்கு காரணம் அவர்களுக்கு தெரியும் அது தவறென்று. நம் சந்தோஷத்திற்காக தம்மையே அர்ப்பணிக்கிற அவர்கள், காதலித்தால் நாம் சந்தோஷமாக இருப்போம் என்று தெரிந்தும் அதை நம் வாழ்வில் அனுமதிக்காததற்கான காரணம் அந்த சந்தோஷம் நிலையானது அல்ல என்று அவர்கள் அறிந்திருப்பது தான். வேதம் சொல்கிறது,பிள்ளைகளே, உங்களைப் பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்@ இது கர்த்தருக்குப் பிரியமானது.(கொலோ 3:20) கர்த்தருக்கு பிரியமானதை செய்ய வேண்டுமென்று நாம் விரும்பினால், நம் பெற்றோருக்கு கீழ்ப்படிய வேண்டு;ம். பெற்றோருக்கு கீழ்ப்படிகிற நமக்கு காதல் செய்ய முடியாது. ஆக தேவனை பிரியப்படுத்த விரும்புகிற யாவருமே காதலுக்கு டாட்டா காட்டுவது தான் சிறந்தது.
காதல் விரும்பிகள் அல்;லது காதலர்கள் காதலை விமர்சிப்பவர்களைப் பற்றி கூறுவது,காதலிக்க வாய்ப்பு கிடைக்காததால் குறை கூறுகிறார்கள் என்று. ஆனால் உண்மையில் காதலை விமர்சிப்பவர்கள் காதலி கிடைக்காததாலோ அல்லது காதலால் கைவிடப்பட்டதாலோ காதலை விமர்சிப்பதில்லை. காதலின் அர்த்தத்தை உணர்ந்ததாலும், காதல் என்னும் பெயரில் நடக்கும் உணர்வுப் போராட்டத்தை முற்றிலும் மேற்கொண்டவர்களாகவும் இருப்பதால் தான் காதலைப் பற்றி பேசுகிறார்கள். இப்பதிவு கூட காதலர்கள் மனதை புண்படுத்த அல்ல. சீர்படுத்தவே..
சரி விஷயத்திற்கு வருவோம். காதல் கூடாது என்று எத்தனையோ வசனங்களை சொல்லிருக்கிறீர்களே, காதலிக்கக்கூடாது என்று நேரடியாக வசனம் இருக்கிறதா? என்று உங்களுக்கு கேள்வி எழலாம். அதற்கு பதில் என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?(யோபு 31:1) என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இதை விடவும் நேரடியாக நாம் வசனத்தை எதிர்பார்க்க முடியாது. ஒரு கன்னியின் மேல் நினைவாயிருப்பதே தவறென்றால்; காதலிப்பதெல்லாம் எம்மாத்திரம். நினைவாயிருப்பது தானே காதலின் முதல் அறிகுறி. முளையிலே கிள்ளி எறிய தேவன் அறிவுறுத்துகிறார். ஏதோ ஒரு கன்னியின் மேல் நமக்கு நினைவு வரும்போதெல்லாம் நமக்கு இந்த வசனம் நினைவு வந்தால் போதுமானது.(ஹி ஹி கன்னியைத் தானே நினைக்கக்கூடாது, கல்யாணமானவரை…ஹி ஹி ……. என்று உங்கள் புத்தி மட்டமாக யோசித்தால் சாரி உடனே யோபு 31:9,10யாத் 20:17 மத் 5;:32, 19:9 வசனங்களைப் போய் படியுங்கள்.)
யோபு 31:1ல் சொல்லப்பட்டுள்ள இவ்வசனத்தில் நினைவாயிருப்பதெப்படி என்று சொல்வதால் அது நாம் செய்வதற்கு தகுதியான காரியம் அல்ல என்று புரிகிறது(ஆதி39:9 தேவனுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்வதெப்படி). மற்றவர்கள் வேண்டுமானால் செய்யலாம் ஆனால் நாம் அதைச் செய்யுமளவிற்கு அந்த காரியம் சிறந்ததல்ல அல்லது அதைச் செய்யுமளவு நாம் மோசமானவர்கள் அல்ல (எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது 1கொரி 10:23)
இவ்வசனத்தில் நாம் கவனிக்க வேண்டிய இன்னுமோர் விஷயம், கண்களோடே உடன்படிக்கை பண்ணின நான் என்னும் வார்த்தை. நாம் கிறிஸ்துவின் சரீரமாயும் தனித்தனியே அவயமாயும் இருக்கிறோம்(1கொரி12:27) நாம் அவர் சரீரத்தின் அவயமாயிருக்கிறோம்(எபே5:30). 1பேதுரு3:21 ன் படி ஞானஸ்நானத்தின் மூலம் அவரோடு நமக்கு உடன்படிக்கை ஏற்படுகிறது. நாம் அவரின் அவயங்களாக அவரோடு இணைக்கப்படுகிறோம். இந்நிலையில் அவ்வுடன்படிக்கையை மறந்து, அதை மீறுவது தவறு. நம்மேல் தேவனுக்கு கோபம் வரும்போது நம்மோடு அவர் பண்ணிய உடன்படிக்கையை நினைவு கூர்கிறார் (சங்106:45, 111:5). அப்படியானால் நமக்கு பாவப்போராட்டம் ஏற்படும்போதெல்லாம் நாமும் அந்த உடன்படிக்கையை நினைவுகூர வேண்டும்.
யோபு 31:1 ன் படி கன்னியின் மேல் நினைவாயிருந்தால் நமக்கு வரும் தீமை என்னவென்று அடுத்த வசனத்தைப் பார்த்தால் உன்னதத்திலிருந்து வரும் சுதந்திரம் தடைபடுகிகிறதாம். அப்பொழுது உன்னதங்களிலிருந்து தேவன் அளிக்கும் பங்கும், உன்னதத்திலிருந்து சர்வவல்லவர் கொடுக்கும் சுதந்தரமும் கிடைக்குமோ?(யோபு 31:2) எனவே கன்னியின் மேல் நினைவாயிருப்பது தேவ ஆசீர்வாத தடை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். பெண்களுக்கும் இது பொருந்தும். என்ன? கன்னி என்பதுடன் பையன் என்னும் வார்த்தையைச் சேர்த்துக் கொள்ள வேண்டியது தான்.
ஓ.கே. இதுவரை நாம் பேசியதில் பதின் வயதுக் காதல் தவறென்பதை உணர்ந்து கொண்டோம். இனி அதை மேற்கொள்வதைப்பற்றி பார்க்கப்போகிறோம். தவறென உணர்ந்தால் தானே திருந்த முடியும். இனி உள்ள பதிவுகள் தவறென ஏற்றுக்கொண்டவர்களுக்கானது. காதல் உணர்வை மேற்கொள்வதெப்படி என பார்க்குமுன் அதன் காரணத்தை பார்க்கப்போகிறோம். காதல் ஆறு ஊற்றெடுத்து பிரவாகித்து வரும்போது அதன் மூலத்தை கண்டறிந்தால் தானே முற்றிலும் முறியடிக்க முடியும்?. எனவே அதற்கான அடிப்படை காரணங்களை ஆராயலாம்…
ஒரு ஆணோ,பெண்ணோ ஒரு குறிப்பிட்ட நபரை காதலிப்பதற்கு சில காரணங்களும், சூழ்நிலைகளும் தூண்டுகின்றன.
(1)அழகு:
ஒன்று நாம் அழகானவர்களை காதலிக்கிறோம். அல்லது நாம் காதலிப்பவர்கள் நமக்கு அழகாகத் தெரிகிறார்கள். எனவே எவ்விதத்தினாலாவது அழகு காதலோடு சம்பந்தப்பட்டு விடுகிறது. பொதுவாகவே மனிதர்களுக்கு ஒவ்வொரு வயதிலும் சில காரியங்கள் முக்கியமாகத் தெரிகின்றன. சிறு வயதில் உடல் பலம்,பிறகு திறமை, வாலிப வயதில் அழகு, பின் படிப்பு, பதவி, பணம், சமூக அந்தஸ்து என பிறப்பிலிருந்து இறப்பு வரை வயதிற்கேற்ப ஒவ்வொன்றும் முக்கியத்துவம் பெருகின்றன. இதில் காதல் வரக்கூடிய வாலிபப் பருவத்தில் அழகு அரியணையில் இருப்பதால் பெரும்பாலான காதல்கள் அழகை சார்ந்திருக்கின்றன.(பின்னே சினிமாவை பார்த்து தானே காதலை கற்றுக்கொள்கிறோம்.அங்கே நாயகிகள் அழகாகத் தானே இருக்கிறார்கள்) அழகு பார்த்தவுடன் வசீகரிக்கச் செய்வது. தன் காதலி(காதலன்) அழகாய் இருக்க வேண்டுமென்று தான் ஒவ்வொருவரும் உண்மையாய் விரும்புகிறார்கள். அழகு காதலில் பிரதான பங்கு வகிக்கிறது.கண்களுக்கு கவர்ச்சியாக அழகாக இருப்பவரை எல்லோருமே விரும்புகிறார்கள்.நாம் இயற்கையாகவே அழகை ரசிக்கிறவர்களாக படைக்கப்பட்டிருக்கிறோம். அதனால் எப்போதும் அழகின்மேல் இனம்புரியாத ஆவல் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிறது. அழகான காதலியை(காதலனை) வைத்திருப்பவர்களை நண்பர் வட்டாரம் மதிக்கிறது. ஆனால் அழகை நேசிப்பவர்களுக்கு இருக்கும் மிகப் பெரிய மூடத்தனம் அந்த அழகின் ஆயுசு குறைவு என்பதை உணராதது தான். 25 வயதில் அழகாக இருக்கும் ஒரு பெண் 35 வயதிலும் அழகாக தான் இருப்பாள் என உறுதி கூற முடியாது. 10 வருடம் கூட நீடிக்காத அழகை நம்பியா பல வருடம் நீடிக்கும் உறவை அமைப்பது? அழகு சிதைந்து விடும் வாய்ப்புள்ளது. அழகானவர்கள் எத்தனையோ பேர் விபத்துகளிலோ, வியாதியிலோ, வறுமையிலோ, கவலையிலோ தங்கள் அழகை பறிகொடுத்த பரிதாபத்தை நான் பார்த்திருக்கிறேன். காதல் அழகு மீது என்றால் அழகு பறிபோகும்போது காதலும் குட்பை சொல்லி விடுகிறது. நமக்கு பிடித்தவரின் முகம் நமக்கு அழகாக தெரிகிறது. அவர் மேல் வெறுப்பு வரும்போதோ அகோரமாகிறது. எனவே அழகு நிரந்தரமில்லை. முக்கியமில்லை.சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திர்Pயே புகழப்படுவாள்.(நீதி 31:30)
(2)தாழ்வுமனப்பான்மை:
தாழ்வு மனப்பான்மை எப்படி பா காதலுக்கு காரணமாயிருக்க முடியும் என்று நீங்கள் கேட்டால், என்னுடைய பதில் காதலுக்கான மிக முக்கிய காரணம் தாழ்வு மனப்பான்மை தான். தாழ்வு மனப்பான்iயின் உச்சத்தில் இருப்பவன், தன்னை எப்படியாவது உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும் எனத் துடித்துக் கொண்டிருப்பான். காதலிக்கிறவர்கள் ஹீரோவாகப் பார்க்கப்படுகிறார்கள் என்னும் மோசமான உண்மை அவனுக்கு தெரிய வரும்போது, மற்றவர்கள் வியக்கும் வகையில் தானும் சாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை அவசரமாக செயல்படுத்தி நண்பர்களின்(!) பாராட்டைப் பெறுகிறான். தாழ்வு மனப்பான்மை மிக மோசமான உணர்வு. அநேகர் தங்களிடம் இருப்பதே தெரியாமல் வைத்திருக்கும் ஸ்லோபாய்ஷன். தாழ்வு மனப்பான்மை தன்னம்பிக்கையை அடியோடு அழித்து விடுவதால், பாவத்தோடு போராட முடியாமல் பணிகிறான். தன்னம்பிக்கை உள்ளவனாக தன்னை காண்பிக்க அவன் எடுக்கும் முயற்சியின் விளைவாக காதல் செய்கிறான். அநேகரிடம் எதற்காக காதல் செய்கிறாய் என்று கேட்கும்போது அவர்கள் சொல்லும் பதில் “காதலித்தாதான் காலேஜில மதிப்பாங்க.” இவங்க எல்லாரும் இந்த லிஸ்ட்ல தான் வருவாங்க. நமக்கு உள்ளேயே இருக்கும் எதிரி தான் இந்த தாழ்வு மனப்பான்மை. இத நாம கொல்லலனா இது நம்மள கொன்னுரும்.
(3)உயர்வு மனப்பான்மை:
என்னடா இவன் சுத்த லூசா இருக்கானே இப்போதான் தாழ்வு மனப்பான்மைனு சொன்னான், இப்போ அதுக்கு எதிரா இருக்கற உயர்வு மனப்பான்மையைச் சொலறானேனு நீங்க நெனச்சிங்கன்னா, நீங்க ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒரு உண்மை, காதலுக்கு இதுவும் காரணம் தான். வெய்ட்……………… முழுசாக சொல்லி விடுகிறேன். உயர்வு மனப்பான்மை உள்ள ஒருவன் தன்னை எல்லாரும் ரசிக்க வேண்டும், விரும்ப வேண்டும் என்னும் ஆசையை இயல்பாகவே பெற்றிருப்பான். இவன் மற்றவர்கள் தன்னை காதலிக்க வேண்டும் என்னும் ஆசையால் பிறரைக் கவர ஏதாவது வித்தியாசமாக செய்துக் கொண்டிருப்பான். இப்படி எண்ணமுடையவர்கள் தாங்கள் பிறரிடம் காதலைச் சொல்வதை விட மற்றவர்கள் தங்களிடம் காதலை சொல்லிவிட வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள்(நாம் பிறரை காதலிக்கும் அளவிற்கு,பிறர் நம்மை காதலிக்க நாம் எடுக்கும் முயற்சிகளும் பாவமே. இதைக்குறித்து தனியாக வேறொரு பதிவில் பேசலாம்) உயர்வு மனப்பான்மை ( Superiority complex) உடையவர்கள் காதல் செய்வதைப் பெருமையாய் கருதுவார்கள். பொதுவாக அழகாக, அறிவாக, திறமையாக இருப்பவர்களுக்கு இந்த உயர்வு மனப்பான்மை இருக்கும். இது தாழ்வு மனப்பான்மையை விட ஆபத்தானது. பெருமை உணர்வு அதிகரிக்கும்போது தனது டாம்பீகத்தை வெளிக்காட்ட தன் தகுதிக்கேற்ப சிறந்த காதல் துணையை தேர்வு செய்கிறார்கள். ஆனால் இவர்கள் காதல் நிலைப்பதில்லை. உள்ளுக்குள் பெருமை இருப்பதால் தன் வருங்கால துணைக்காக வளைந்து கொடுக்க தயங்குவார்கள். அடிக்கடி ஜோடியை மாற்றிக் கொண்டிருப்பார்கள். வேதம் சொல்கிறது,தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார்(யாக் 4:6). தாழ்வு மனப்பான்மைக் காதலுக்கும் உயர்வு மனப்பான்மைக் காதலுக்கும் உள்;ள வித்தியாசம், முன்னது தன்னை பிறர் ஏற்க வேண்டுமெனக் காதலிக்கும். பின்னது தன்னை பிறர் புகழ வேண்டுமென காதலிக்கும். எவ்வகையிலும் காதல் ஏற்புடையதன்று. நமக்கு மனத்தாழ்மை தேவை .ஆனால் தாழ்வு மனப்பான்மை தேவையற்றது. தன்னம்பிக்கை தேவை. ஆனால் பெருமை தேவையற்றது.
(4)பரிதாப உணர்வு:
நல்லவர்கள் கூட வஞ்சிக்கப்பட வாய்ப்புள்ள காதலின் முக்கிய காரணம் பரிதாப உணர்வு. நமக்குத் தெரிந்தவர்கள் நாம் பார்த்து பரிதாபப்படக்கூடிய நிலையில் வறுமையிலோ, அழகின்மையிலோ, மோசமான குடும்ப சூழ்நிலையிலோ, ஊனமாகவோ இருந்தால், அவர்களைப் பார்த்து அவர்கள் மேல் காதல் கொள்வது என்பது இவ்வகையில் அடங்கும். உண்மையிலேயே பரிதாப உணர்வுக்கும் காதல் உணர்வுக்கும் அநேக வித்தியாசங்கள் உண்டு. இந்த வித்தியாசம் தெரியாததுதான் குழப்படிக்கு காரணம். காதல் உணர்வு என்பது வேறு.பரிதாப உணர்வு என்பது வேறு. பரிதாபத்திற்குரிய நபர் மற்றவர்களிடம் இருந்து பரிதாபத்தை பெற நிச்சயம் விரும்பமாட்டர். இயல்பான தோழமையையே விரும்புவர். அவர்களையும் சராசரி மனிதனாக பார்க்க வேண்டுமென்பது தான் அவர்களுடைய ஆசையாகவும் இருக்கும். பிறர் மீது பரிதாபப்படுவதும், அவருக்கு உதவ நினைப்பதும் தவறல்ல. ஆனால் அது காதலாக மாற முடியாது. எனக்குத் தெரிந்த மாணவி ஒருவனைக் காதலித்துக் கொண்டிருந்தாள். நான் அவளிடம் அவனைக் காதலிப்பதற்கான காரணம் என்னவென்று கேட்டபோது,“அவன் பாவம். எனக்காக அவன் வீட்டிலும் என் வீட்டிலும் அடி வாங்கியிருக்கிறான். என் பின்னாலேயே சுத்திக் கொண்டிருந்தான். பார்க்க பாவமாக இருந்தது. அதனால் தான் காதலித்தேன்” என்று வார்த்தைக்கு வார்த்தை அவன் பாவம் என்று சொல்லிக் கொண்டிருந்தாள். இதுவும் பரிதாபத்தினால் வரும் காதல் தான். பரிதாபக் காதலில் உள்ள மிகப் பெரிய சிக்கல் என்னவென்றால், பரிதாபப்படுபவர் பரிதாபத்திற்குரியவரை விட தான் தான் பெரியவர் என்றும், தான் பெரிய தியாகம் செய்திருக்கிறோம் என்றும் நினைப்பதால், பரஸ்பர அன்பில் பிளவு ஏற்படுகிறது. பரிதாப காதலின் எண்ணிக்கை குறைவு தான் என்றபோதிலும், கணிசமாக நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. காதலில் சிக்க மாட்டேன் என்று உறுதியாய் இருப்பவர்களையும் சிக்க வைக்க பிசாசு எடுத்திருக்கும் ஆயுதம் தான் இவ்வகை காதல்.
(5)அன்புக்கு ஏக்கம்:
அன்புக்காக ஏங்குவது காதல் நுழைய கதவை திறந்துவைத்துவிட்டு காத்திருப்பது போன்றது. அன்புக்காக ஏங்கும் ஒருவருக்குள் காதல் அன்பு என்னும் பெரில் எளிதாக பிரவேசம் செய்துவிடுகிறது. சிறுவயதில் கிடைக்க வேண்டிய அன்பு கிடைக்காததால் மனதளவில் பாதிப்பு ஏற்பட்டு தான் சைக்கோ கில்லர், தற்கொலைப்படை என மாறி விடுகிறார்கள். அன்புக்கான ஏக்கம் ஒவ்வொருவருடைய அடி மனதிலும் இருக்கத்தான் செய்கிறது. அந்த அன்பு அவர்கள் உறவினர் நண்பர்கள் மூலம் கிடைக்கும் போது பிரச்சனையில்லை. அப்படி கிடைக்காத பட்சத்தில், புதுமுகம் மூலம் அன்புத் தேடலை தணித்துக் கொள்ள முயல்கிறார்கள். இறுதியில் காதல் நோயாளி ஆகி விடுகிறார்கள். கண்டிப்பு அதிகம் இருக்கும் வீட்டில் இருந்து அடிக்கடி பெண்கள் ஓடிப் போவதற்கான காரணம் இது தான். கொடுக்கப்பட வேண்டிய அன்பு அவர்களுக்கு கொடுக்கப்படாவிட்டால், அன்பை வாரி வழங்க தயாராயிருக்கும் வேறொருவரிடமிருந்து அன்பை பெற்றுக்கொள்கிறார்கள். அந்த அன்பின் தன்மைகளைப் பற்றி ஆராயவெல்லாம் நேரமில்லாமல் அவசரகதியில் அதில் விழுந்து விடுகிறார்கள். அன்பு கிடைக்க வழியில்லாதவர்கள் பற்றி பிரச்சனையில்லை. ஆனால் நாம் அன்பே உருவான தேவனாம் இயேசுவை ஆத்ம நேசராக வைத்துக் கொண்டு அன்புக்காக ஏங்குவதோ அன்பைத் தேடி அலைவதோ அவரை அமானபப்டுத்துவதாகும். அவரது அன்பினால் நிறைவைப் பெற்றிருக்கிற நாம், மற்றவர்களுக்கும் அவர் அன்பைப் பற்றி தெரிவிக்கும் மிக முக்கியப் பொறுப்பில் இருக்கிறோம். அவர் நம்மை நேசிப்பதை நமக்காக உயிரையே கொடுத்து வெளிப்படுத்தியிருக்கிறார்(ரோமர் 5:8) .பின்னும் நாம் அன்புக்hக ஏங்குவது சரியா? அன்புக்காக ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு நாம் அனுசரனையாக அல்லவா இருக்க வேண்டும்? அன்புக்காக ஏங்குவதற்கு நாம் ஒன்றும் அநாதை அல்லவே. திக்கற்ற நமக்கு தகப்பனாக அவர் இருக்கிறாரே(சங்68:5) அன்புக்கான ஏக்கம், நமக்கு யாருமே இல்லை என்னும் வெறுமை உணர்வு வரும்போதெல்லாம் தேவ அன்பை தியானித்தால் இதிலிருந்து எளிதாக விடுபடலாம்.
(6)நற்குணங்கள்:
எப்படி பிறருடைய அழகு நம்மைக் கவருகிறதோ அது போல பிறருடைய நற்குணங்களும் நம்மை வெகுவாக கவர்ந்து விடுகிறது. பிறரிடம் நம்மைக் கவரும் நற்குணம் இருக்குமானால், அந்த நற்குணத்தை நாமும் அடைய முயற்சிக்க வேண்டுமே தவிர அந்த நபரை அடைய முயற்சிப்பது முட்டாள்தனம். முக்கியமான விஷயம் என்னவெனில் அழகிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறவர்களை அழகு கவர்வது போல நற்குணங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களைத்தான் நற்குணங்கள் கவர்கின்றன. எனவே நற்குணங்களால் ஈர்க்கப்படுகிறவர்கள் பெரும்பாலும் நல்லவர்களாகவே இருப்பர் என்பது தான் பரிதாபம். இப்படி நல்லவர்கள் வஞ்சிக்கப்படுவதற்கான காரணம், இந்த மோசமான உலகச் சூழ்நிலையிலும் ஒருவர் இவ்வளவு நல்லவராக இருக்கிறார்களே என்னும் ஆச்சரிய உணர்வு தான். ஆனால் இவர்கள் புரிந்துகொள்ளாத ஒரு உண்மை, இவர்கள் பார்வைக்குதான்; அவர்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள் என்பதும், இன்னும் அவர்களை முழுமையாக அறிந்து கொள்ளவில்லை என்பதும் தான். எல்லா மனிதர்களுக்குமே இரு பக்கங்கள் உண்டு. நாம் வகுப்பிலோ, அலுவலகத்திலோ,சுற்றத்திலோ அவர்களுடைய ஒரு முகத்தைத் தான் பார்க்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது.
உலகில் அனைவருமே நல்ல நடிகர்கள் என்பதை நாம் ஒத்துக் கொள்ளதான் வேண்டும். அநேக நேரங்களில் நாம் எந்த நற்குணம் பிறரிடம் இருக்கிறதென்று பாராட்டுகிறோமோ அதற்கு எதிர்மாறான குணம் அவர்களுக்குள் இருக்கும். உதாரணத்திற்கு கடுங்கோபியாக இருக்கும் ஒருவன் காதலிக்கும் போது சாந்த சொரூபியாக இருப்பான். “இந்தகாலத்தில கோபமே படாத ஒருவன் இருக்கிறானே இவன் தான் நமக்கு ஏத்த ஜோடி” என்று வரிந்து கட்டிக் கொண்டு காதலிப்பவர்கள் பிற்காலத்தில் அவன் கோபத்தின் விளைவுகளை எல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் காதலன் உங்கள் முன்பு சிகரெட் குடிக்கவில்லையென்றால் அவன் சிகரெட்டே குடிக்க மாட்டான் என்பது அர்த்தமல்ல.நற்குணங்கள் இருக்கிற எல்லாரிடமும் தீக்குணங்களும் இருக்கத்தான் செய்யும். தூர இருந்து பார்க்கும் போது நல்லனாகத் தெரிகிறவன் நெருங்க நெருங்க அயோக்கியனாகத் தெரிகிறான். மனிதன் சூழ்நிலைகளுக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளக் கூடியவன். எனவே யாரைக் கண்டும் நாம் ஏமாந்து விடக் கூடாது. வேதம் சொல்கிறது,இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.(எபி 13:8) ஆமென். ஆவரை நெருங்க நெருங்க அவரைப் பற்றிய நம்மின் நல்மதிப்பீடு அதிகரிக்கத்தான் செய்யுமே தவிர குறையாது. தீக்குணங்களே இல்லாத நற்குணம் நிறைந்தவர் அவர் ஒருவரே.
(7)இயற்கை ரசனை:
இயற்கையாக மனிதனுக்கு இருக்கும் ரசனை உணர்வும் காதலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான ரசனை உணர்வு இருக்கும். அதனால் தான் உணவிலிருந்;து உடை வரை நம்முடைய தேர்வு வித்தியாசப்படுகிறது. நமக்குள் இயற்கையாக இருக்கும் ரசனை உணர்விற்கேற்ப நாம் எதிர்பாலினரை ரசிக்கிறோம். சிலருக்கு வட்ட முகமுடைய பெண்களைப் பிடிக்கும். உயரமான ஆண்களை சிலருக்கு பிடிக்கும். கலகலப்பானவர்களை சிலருக்கும், அமைதியாயிருப்பவர்களை சிலருக்கும் பிடிக்கும். மற்றவர்களுக்கு அசிங்கமாகத் தெரிகிறவர்கள் சிலருடைய பார்வைக்கு அழகாகத் தெரிவர். சினிமாவில் ஒவ்வொரு நடிகனுக்கும் தனிப்பட்ட ரசிகர் கூட்டம் இருப்பதும், அவர்களுக்கு வேறு நடிகரை பிடிக்காததற்கும் இந்த ரசனை உணர்வே காரணம். பிறரை ரசிப்பது தவறல்ல. அது காதலாக மாறுவது தான் தவறு. இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கிய காரியம் தொடர்ந்து நாம் ரசித்துக் கொண்டிருக்கிற விஷயம் நாளடைவில் நமக்கு சலித்து விடும் என்பது தான். இதனால் தான் காதலிக்கும் போது தித்திக்கும் அன்பு திருமணத்திற்குப் பின் திகட்டி விடுகிறது. ஆனால் நம் தேவ அன்போ ரசிக்கவும் ருசிக்கவும் ஏற்றது(சங்34:8)
(8)ஒத்த எண்ண ஓட்டம்:
ஒரே தொழில் செய்கிறவர்கள், ஒரே வகையான திறமை உடையவர்கள், ஒரே விதமான ரசனையைப் பெற்றிருப்பவர்கள், ஒரே மாதிரியான எண்ண ஓட்டமுடையவர்கள், ஒரே விதத்தில் பாதிப்புக்குள்ளானவர்கள்(வியாதி,கடன் போன்றவை), ஒரே விஷயத்தில் ஆர்வமுள்ளவர்கள் போன்றோரிடம் காதல் தொற்றிக்கொள்வது மிக எளிது. சில நேரங்களில் இவர்களுடைய திருமண வாழ்க்கை நன்றாகவும் அமைகிறது. ஆனால் பெரும்பாலானோரின் வாழ்க்கை சுவாரஸ்யமற்றதாகி விடுகிறது. ஒரே விஷயத்தை அசை போட்டுக் கொண்டிருப்பதால் வாழ்வு வெறுத்து விடுகிறது. ஒத்த உணர்வுடையவர்களை திருமணம் செய்ய விரும்புவது தவறல்ல. ஆனால் காதலிப்பது தவறானது.(நமக்கு ஏற்ற துணை இதுதான் என உறுதியாகத் தெரிந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது இன்னொரு பதிவில்).
(9)திறமை:
வியக்கவைக்கும் சிலரின் திறமையும் நம்மை காதலில் ஆழ்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நமக்கு இல்லையே என நாம்; வருந்தும் திறமை மற்றோரிடம் இருக்கும் போது அவர் மேல் ஈர்ப்பு வருவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. உலகம் போற்றும் மனிதரிடம் சரணடைய விரும்புவதும் இவ்வகையிலானதே. ஆனால் இறுதி வரை சந்தோஷமாய் வாழ்வதற்கு திறமை மட்டும் போதாதே? மணக்க வேண்டிய பல பிரபலங்களின் மணவாழ்க்கை நாறுகிறதே? அதீத திறமை இருப்பவரிடம் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் திமிரும், ஆணவமும், பிறரை மதிக்காத பண்பும் இருக்கும்(எல்லாரிடமும் அல்ல). திறமைக்கு கொடுக்கும் நேரமும்,முக்கியத்துவமும் அவர் உங்களுக்கு கொடுப்பாரா என்று தெரியாது. உலகமே வணங்கும் பிரபலமாய் இயேசு இருக்க, உலகையே படைத்த திறமையுள்ளவராய் அவர் இருக்க நமக்கேன் உலக ஆசை..
(10)தனிமை உணர்வு:
அன்புக்கு ஏங்குதல் போன்றே இதுவும்;. ஆனால் அன்பு கிடைக்காதவர்கள் தான் அன்புக்கு ஏங்குவார்கள்.தனிமை உணர்வோ கூட்டமாக இருந்தாலும் வரும். தனிமையாக இருப்பதற்கும் தனிமை உணர்வோடு இருப்பதற்கும் பெருமளவில் வித்தியாசம் இருக்கிறது. தனிமை உணர்வோடு இருப்பவர்கள் தனியாக இல்லாவிட்டாலும் தான் தனியாகவே இருப்பதாக உணர்வார்கள். இந்த தனிமை உணர்விலிருந்து விடுபட தவிப்பார்கள். அதற்காக டி.வி., கேம்ஸ், கதை என்று ஏதாவது முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள். இந்நேரத்தில் அவர்களுக்கு எதிர்பாலின துணை கிடைத்தால் கப்பென்று பிடித்துக் கொள்வார்கள். தனிமையை தீர்க்க கிடைத்த மருந்தாக ஏற்றுக்கொள்வார்கள். தனிமை உணர்வு மிக ஆபத்தானது. சந்தோஷத்தை சீர்குலைக்கக் கூடியது. உள்ளத்தின் வெறுமை சில நேரங்களில் தற்கொலையைக் கூட தூண்டி விடக் கூடியது. தனிமையை தேவனோடு உறவாடுவதறகான நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டால், தனிமை போய் இனிமை வரும். இரவும் பகலும் வேதத்தில் தியானமாயிருப்பதும்(சங்1:2) தனிமையை உணர்வை தவிர்க்க நல்ல வழி.
(11)சினிமா மோகம்:
நம்மில் அநேகர் காதல் நோய் கொண்டதில் மிக முக்கிய பங்கு சினிமாவுக்கு இருக்கிறது. காதல் இல்லாமல் சினிமா இல்லை. சினிமா இல்லாமல் காதல் இல்லை. சினிமாவில் காட்டும் காட்சிகள் நம்மையறியாமல் நம்மை பாதிக்கிறது. சினிமாவில் வரும் விஷயங்களை வாழ்வில் அனுபவிக்க ஆசை வருகிறது. நிறைவேற்ற முடிந்த நல்ல வாய்ப்பாக காதல் இருப்பதால், காதலிக்கத் தொடங்கி விடுகிறார்கள். சினிமாவில் வருவதுபோல் ஒரே பாட்டில் பணக்காரனாக முடியாது.பத்துப்பேரை ஒத்தை ஆளாக அடித்து வீழ்த்த முடியாது.அடிக்கடி ஃபாரின் போக முடியாது. எல்லாம் சினிமாவில் வருவதில் செய்ய முடிந்தது, காதலியோடு கைகோர்த்து நடக்கலாம்,சைகை மொழியில் பேசலாம், செல்ல சண்டை போடலாம். இப்படி சினிமாவை செய்முறையில் பார்க்க காதலிப்பவர்களும் உண்டு. சினிமாவில் எல்லா ஹீரோக்களும் காதலிப்பதால் காதலித்தால் ஹீரொவாகி விடலாம் என்னும் நப்பாசையும் காரணம். உண்மை வாழ்வின் ஹீரொக்களான அன்னை தெரசா போன்றோர் காதலிப்பதில்லை என்பது இவர்களுக்கு தெரிய நியாயமில்லை. கல்யாணத்தோடு சினிமா நிறைவு பெற்று விடுகிறது. அதன்பின் வரும் பிரச்சனைகள் நமக்கு தெரிவதில்லை. சினிமாவில் ஹீரொவுக்கு பிரச்சனைகளுக்குப் பின் திருமணம் வருகிறது. உண்மையில் திருமணத்திற்கு பின் பிரச்சனை வருகிறது
எனவே சினிமா மாயை என்றும், அதின் நாயகர்கள் நடிக்கத்தான் செய்கிறார்கள் என்றும்; நாம்;; உணர்ந்து கொண்டால் போதுமானது.
(12)பணம், பாலிய இச்சை:
இவைகளுக்காக காதல் செய்பவர்களை உண்மைக் காதலர்கள் என்று உண்மைக் காதல் செய்பவர்களாக தங்களைக் கூறிக் கொள்பவர்களே சொல்வதால்; நாமும் விட்டு விடுவோம். ஆனால்; இவ்விரண்டுமே நிலையானது அல்ல என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
பொதுவாக மேற்கண்ட காரியங்கள் காதல் வருவதற்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன.காரணம் இல்லாமையால் தான் காதல் வருகிறது என்று நீங்கள் சொன்னாலும், தீவிரமாக ஆராய்ந்தால் மேற்கண்ட காரணங்களால்;தான் காதல் வருகிறது… இந்த காரணங்களை விடவும் காதல் வருவதின் முக்கிய காரணம் பருவ (தடு)மாற்றம் தான்(முந்தைய பதிவில்). எப்படியோ எதிரியின் இருப்பிடத்தை கண்டுபிடித்தபின் அவனை அழிப்பது ஒன்றும் கடினமல்ல.
காதலின் காரணங்களை அறிந்து கொண்ட நமக்கு அதிலிருந்து விடுபடுவதும், விடுபட போதிப்பதும் இலேசானது தான். அல்லேலூயா..
காதலை மேற்கொள்வது எப்படி?
காதல் செய்வதற்கு தகுதியானவர் யார்?
ஏற்கனவே காதலித்துக் கொண்டிருக்கும் நான் என்ன செய்வது?
தெரிந்தவர்கள் காதலை சொன்னால் என்ன செய்யலாம்?
போன்ற விஷயங்களை தொடர்ந்து வரும் பதிவுகளில் அலசுவோம்.
காதலிக்கலாமா பிரதர் - பகுதி 3
காதலிக்கலாமா பிரதர்? - பகுதி 4
காதலிக்கலாமா பிரதர் - பகுதி 5


.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
No comments:
Post a Comment