Showing posts with label உபதேசம். Show all posts
Showing posts with label உபதேசம். Show all posts

Wednesday, 14 June 2017

பிறந்தவர் யார்?

   
 உலகம் முழுவதும் வெகு விமரிசையாய்க் கொண்டாடப்படும் பெரிய பண்டிகை கிறிஸ்துமஸ். கிறிஸ்துமஸ் கொண்டாடலாமா? கூடாதா? என கிறிஸ்தவர்களுக்குள் வாக்குவாதம் நடந்துகொண்டிருக்க, கிறிஸ்துவை அறியாதோரிடமிருந்து கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. காலத்தை சிலர் கச்சிதமாய்ப் பயன்படுத்தி இயேசு பற்றிய சுவிசேஷத்தை அறிவித்துக் கொண்டிருக்கின்றனர். சிலரோ தங்கள்ஆடம்பரத்தை இயேசுவுக்கே அறிவித்துக் கொண்டிருக்கின்றனர்.  இயேசுவின் பெயரால் உதவிகள் செய்யப்படுகின்றன. சில கிறிஸ்தவர்கள் தங்கள் சொந்த சபையையே தேடி அலைந்து கண்டுபிடித்தமர்கின்றனர்.  எது எப்படியோ கிறிஸ்து பிறந்தாரென்பது முழு நிச்சயமான உண்மை. அவர் எப்போது பிறந்தாரென்பது நமக்கு தெரியாது.  ஆனால் ஏன் பிறந்தாரென்று தெரியும். அவர் எந்த சூழ்;நிலையில் பிறந்தாரென்பது தெரியாது, எந்த சூழ்நிலையை உருவாக்கப் பிறந்தாரென்று வேதம் வாயிலாகக் கற்கிறோம். அவர் பிறந்த நாளென்று உலகம் ஒரு நாளை சொல்கிறது. அந்த நாளில் பிறந்தாரோ இல்லையோ அவர் பிறந்தார். எனவே இப்படிப்பட்ட நாட்கள் மூலம் அவர் பிறப்பு தியானிக்கப்படுகிறது. அவர் பிறப்பைப் பற்றி பேசப்படுகிறது. வித்தியாசப்பட்ட கோணங்களில் அவர் பிறப்பு அலசப்படுகிறது. அவர் பிறந்ததற்கான நோக்கமும் சில இடங்களில் ஆராயப்படுகிறது. எப்படியோ கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார் . அதனால் நான் சந்தோஷப்படுகிறேன் (பிலி 1:18).  பீடிகையை வைத்து நீங்களே கண்டுபிடித்திருப்பீர்கள். ஆம் . நானும் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி, உங்கள் கவனத்தைப் பெற்று,  அவர் பிறப்பைப் பற்றி பேசப்போகிறேன்.

                   நம்முடைய தியானம் சற்று வித்தியாசமானது. அவர் ஏன் பிறந்தார்? எங்கு பிறந்தார்? எப்போது பிறந்தார்?  எதற்கு பிறந்தார்? எப்படி பிறந்தார்? யாருக்காக பிறந்தார்?  இப்படி எல்லாம் பல கோணங்களில் டிசம்பர் மாத தொடக்கத்திலிருந்தே தியானிக்கப்பட்டு வருகிறது. கேள்வி வகைகளில் மிச்சமிருக்கும் ஒன்று, அதிகம் தியானிக்கப்படாத ஒன்று ? எது.  பலே . நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்கள்.  அது தான். நீங்கள் நினைப்பது சரிதான். யார் பிறந்தார்? என்பது தான். என்ன பிரதர் இதெல்லாம் ஒரு கேள்வியா? யார் பிறந்தார்னு தெரியாமலா இருக்கோம்?  இயேசு தானே பிறந்தார். இதச் சொல்ல வந்துட்டீங்களாக்கும். இப்படி நினைக்கிறீர்கள். பிறந்தவர் யார்? என்றால் 5 வயது பிள்ளையும் சொல்லும் இயேசு என்று. இப்போது இதே கேள்வியை சற்று மாற்றிக் கேட்கிறேன். இந்த இயேசு யார்?

                  இப்போது தெளிவாக கட்டுரையின் கருத்திற்கு வருகிறேன். நமக்காக பிறந்தவர் இயேசு என்று தெரியும். நமக்காக பிறந்தவர் குமாரனா? அல்லது பிதாவா?.. அதிர்ச்சியாக இருக்கும் சிலருக்கு. இதெல்லாம் ஒரு கேள்வியா? நமக்கு ஒரு பாலகன் பிறந்தார். குமாரன் கொடுக்கப்பட்டார் (ஏசாயா 9:6) என்று ஒவ்வொரு கிறிஸ்துமஸ்ஸிலும் வாசிக்கிறோம். தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.யோவா 3:16. இது எல்லாருக்கும் தெரிந்த வசனம். மேலும் நாம் அடிக்கடி வாசிக்கிற வசனம், மத்தேயு 1:21 , அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.  ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். இது போல் இன்னும் பல வசனங்கள் இருக்கிறது. எனவே நமக்கு தெரிந்திருந்த  ஒரு விஷயம் , பிறந்தவர் குமாரனே என்று. 

                  இந்த உலகத்தில் பிறக்கும் அனைவருமே குமாரர்கள் தான். இந்த உலகத்தில் நாம் பிறந்தாலே நாம் குமாரர் தான். நாம் நம் தாய் தந்தையர்க்கு குமாரர் , குமாரத்திகளாக இந்த உலகத்தில் பிறக்கிறோம். லூக்கா 3 : 22 முதல் 38 வரை வாசித்தால் இதன் விளக்கம் புரியும். இந்த உலகத்தில் பிறந்த நாமனைவரும் குமாரர்களாய் இருக்கிறோம். மாம்ச சரீரத்தில் நாம் பிறக்கும்போதே நாம் குமாரர்களாகி விடுகிறோம். எனவே மாம்ச சரீரத்தில் இந்த உலகில் நமக்காக பிறந்த இயேசுவும் குமாரன் என்பதில் சந்தேகமில்லை. இப்போது மறுபடியும் கேட்கிறேன், பிறந்தவர் யார்? யார் பிறந்தார்? குமாரனாக இந்த உலகில் வந்து பிறந்தவர் யார்? அவர் ஏற்கனவே குமாரனாக இருந்தவர் தானா? அல்லது வேறொரு ஸ்தானத்திலிருந்து , மண்ணில் வந்ததால் குமாரன் ஆகிறாரா? அது உண்மையென்றால், அவர் இயேசு என்னும் பெயரில் மண்ணில் பிறக்கும் முன் அவர் யார்? குழப்புவது போல் இருந்தால் மீண்டும் ஒருமுறை பதிவைப் படியுங்கள்.

                  பொதுவாகவே இரகசியம் என்பதன் அர்த்தம், அனைவருக்கும் தெரியாதது, குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே தெரிவது. எல்லாருக்கும் தெரிந்திருந்தால், அது இரகசியம் அல்ல. உரிமையான சிலருக்கு மட்டும், தெரிவது தான்இரகசியம். இரகசியத்தைக் கண்டுபிடிக்க நாம் சற்று முயற்சி எடுக்க வேண்டும். வேதத்திலேயும் அநேக இரகசியங்கள் இருக்கிறது. அது தெரிந்தால் தான், நமக்காக பிறந்த இயேசு யார் என்று நாம் அறிந்துகொள்ள முடியும். வேதத்திலே, 1 தீமோத்தேயு 3:16 ல் ,அன்றியும் தேவபக்திக்குரிய இரகசியமானது, யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது . என்று எழுதப்பட்டிருக்கிறது. அந்த மேன்மையான, தேவபக்திக்குரிய இரகசியம் என்னவென்றால், தொடர்ந்து வாசிக்கும்போது தெரிகிறது,தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.1தீமோ 3:16. தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார். ஆமென். நாம் அறிந்துகொள்ளவேண்டிய இரகசியம். நம் தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார். நமக்கு இருப்பது எத்தனை தேவர்கள்? இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.உபா 6:4. ஒரே தேவன் உண்டு. அவரைத் தவிர வேறொரு தேவன் இல்லை (மாற் 12:32). நமக்கு ஒரே ஒரு தேவன் உண்டு. அவர் யார்? அவர் தான் பிதா. யோவான் 8: 41 ஒரே பிதா எங்களுக்குண்டு. அவர் தேவன். இன்னும் அநேக வசனங்கள் இருக்கிறது. எனவே பிதா தான் தேவன்.  தேவன் தான் பிதா. இப்போது 1தீமோத்தேயு 3: 16 ஐ நாம் இரகசியம் அறிந்தவர்களாய் வாசிப்போமானால், பிதாவாகிய தேவன், மாம்சத்தில் இயேசுவாக வெளிப்பட்டார். அல்லேலூயா.

                  கிறிஸ்துமஸ் பிறப்பின்போதெல்லாம் நாம் வாசிக்கும் வசனம், ஏசாயா 9:6, நமக்கு ஒரு பாலகன் பிறந்தார். நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார். கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும். அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். இந்த வசனத்தை நன்றாக கவனித்தீர்களா? பாலகன் பிறந்தார், குமாரன் கொடுக்கப்பட்டார் என்று சொல்லிவிட்டு இறுதியில் சொல்கிறது, அவர் நித்திய பிதா என்று. நித்திய பிதா என்றால் என்ன? நித்திய நித்தியமாக அவரே பிதா. குறிப்பிட்ட காலத்துக்கு அல்ல. எல்லா காலத்திற்கும். அந்த பிதா யாரென்றால், அவர் தான் கொடுக்கப்பட்ட குமாரன்.  இன்னொரு வகையில் சொல்வதென்றால், குமாரனாம் இயேசுகிறிஸ்து தான் பிதா.

                  பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார் (எபி 2:14). பிள்ளைகளாகிய நாம் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, நம்மை படைத்த பிதாவாகிய அவரும், நம்மைப் போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடைய இயேசுவானார். பிள்ளைகள் என்று சொல்லப்பட்டிருப்பதால், அவர் என்ற பதம் பிதா என்றாகிறது. (உதாரணம், வேலையாள் என்று வந்திருந்தால், அவர் - எஜமான்) பிதாவாகிய அவர், பிள்ளைகளாகிய (குமாரர்களாகிய) நமக்காக, குமாரரானார். அல்லேலூயா.  ஆதியிலே வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய தேவன், நம் மேல் நேசமாயிருந்து அவரது குமாரனை அனுப்பினார் என்பதையே அவரது அன்பின் அடையாளமாய் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அவரே நமக்காக இறங்கி வந்து , நம்மை குனிந்து தூக்கினாரென்பது எவ்வளவு ஆச்சரியம். வேறொருவரை அனுப்பாமல் அவரே இறங்கி வந்து நம்மை நேசித்தார் அவர்.

                  இப்போது கேட்கிறேன், பிறந்தது யார்? குமாரனா? பிதாவா? . ஆம் நமக்காக பிறந்தது பிதாவே. அவர் நித்திய பிதா.  நமக்கு ஒரே ஒரு தேவன் உண்டு. அவர் மாம்சத்திலே இயேசுவாக வெளிப்பட்டார். இருவரும் தனித்தனி நபரல்ல. ஒருவரே. அதனால் தான், தேவன் ஒருவரே செய்யமுடிந்த காரியங்களை இயேசு செய்தார். 1ராஜாக்கள் 8:40 , தேவன் ஒருவரே மற்றவர்களின் இருதயத்தை அறியமுடியும். இயேசு அறிந்தார் . யோபு 9:8,ல் தேவன் ஒருவரே சமுத்திர அலைகளின்மேல் நடக்கிறவர் என்று பார்க்கிறோம். இயேசு நடந்தார். தேவன் ஒருவரே பாவங்களை மன்னிக்க முடியும் .இயேசு மன்னித்தார் (லூக் 5:21) 1கொரி 8: 4ன் படி ஒருவரையல்லாமல் வேறொரு தேவன் இல்லையென்று அறிந்திருக்கிறோம். நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர். யாக் 4:12. நியாயப்பிரமாணத்தை கட்டளையிட்டவர் பிதா. அவர் ஒருவரே இரட்சிக்கவும் (இரட்சகர் இயேசுவாக) அழிக்கவும் (நியாதிபதி இயேசுவாக)வல்லவர். என் மகிமையை வேறொருவனுக்கும் கொடேன் (ஏசா 42:8) என்று சொல்லியிருக்க, பிதாவின் மகிமையில் இயேசு வருவதின் (லூக்கா 9:26) இரகசியமும் இதுதான்.

                  எனவே நமக்காக பிறந்தவர் யாரென்பதை நாம் அறிந்துகொள்வது மிக அவசியம். என்றென்றைக்கும் ஸ்தோத்தரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன் (ரோமர் 9:5) இயேசுவாக நம் மத்தியிலே பிறந்திருப்பது மிகப் பெரும் ஆச்சரியம்.  அவர் பிறந்தது நமக்காக. வளர்ந்தது நமக்காக. மரித்ததும், உயிர்த்ததும் நமக்காக. இன்றும் நம்மை பரிசுத்த ஆவியாய் பரிவோடு நடத்துகிறார். அவர் ஒருவருக்கே சகல கனமும் வல்லமையும் துதியும் உண்டாவதாக . ஆமென். அல்லேலூயா.

Monday, 25 May 2015

ஒரே நாமம்


ஒரே நாமம்

            நித்தியம் என்பது துவக்கமும் முடிவில்லாத ஒன்றாகும்.இந்த நித்தியத்திலிருந்து பிறந்ததுதான் ஆரம்பமும் முடிவுமுள்ள காலமாகும்;.இந்தக் காலம் என்னும் எல்லைக்குள் தான் மனுக்குல சரித்திரம் துவங்கி அது முடியும் தருவாயிலிருக்கிறது.மனுக்குலத்தை படைத்த தேவன் மனுதனோடு எப்பொழுதும் தொடர்பு கொள்ளுகிறவராயிக்கிறார்.அவ்விதமான தொடர்பின் அடிப்படையில் காலமானது,குற்றமற்ற காலம்,மனச்சாட்சியின் காலம்,நியாயப்பிரமாணத்தின் காலம்,கிருபையின் காலம்,நியாயத்தீர்ப்பின் காலம் என்கிற ஐந்து விதமான யுகங்களைக் கடந்து செல்லுகிறது.இவைகளில் முதல் 3 யுகங்கள் பழைய உடன்படிக்கையின் காலத்திற்குள்ளும் அடுத்த 2 யுகங்கள் புதிய உடன்படிக்கையின் காலத்திற்குள்ளும் அடங்குகின்றன.

             காலத்திற்கும் தேவனுடைய நாமத்திற்கும் சம்பந்தமுண்டு.தேவன் தமது மகத்துவமான நாமத்தை இக்காலம் என்னும் மனிதவரலாற்றில் தான் மனுக்குலத்திற்கு வெளிப்படுத்துகின்றார்.அந்தந்த காலத்தில் வாழும் தமது பிள்ளைகளுக்குத் தாம் தீர்மானித்த தம்முடைய நாமங்களில் ஒன்றினை அறிவித்து அதன் மூலமாகத் தம்முடைய தன்மையையும் திட்டத்தையும் தேவன் வெளிப்படுத்துகிறவராயிருக்கிறார்.தேவனுடைய உண்மையான பிள்ளைகள் தங்கள் காலத்தையும் தங்கள் காலத்திற்கென்று தேவன் வெளிப்படுத்திய நாமத்தையும் அறிந்துகொண்டு அந்த நாமத்திற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளவேண்டும்.

     நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலம் கிருபையின் காலமாகும்.இதை புறஜாதிகளின் காலம் என்றும் சபையின் காலம் என்றும் கூட அழைக்கலாம்.இந்தக் காலத்திற்கென்று தேவன் கட்டளையிட்டதும் வெளிப்படுத்தியதுமான தேவநாமம் இன்னது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.இதை நாம் அறிவதற்கு முன்பாக பழைய உடன்படிக்கையின் காலங்களில் வெளிப்படுத்தப்பட்ட தேவ நாமங்களை குறித்து சற்று அறிந்து கொள்ளுவதும் நமக்கு நல்லது.வேதத்திலுள்ள பழைய ஏற்பாடு எபிரேய மொழியிலும் புதிய ஏற்பாடு கிரேக்க மொழியிலும் எழுதப்பட்;டன.அந்த மூல எபிரேய நாமங்களில் சிலவற்றை நாம் இங்கே குறிப்பிடுவது மிகவும் அவசியமாகும்.


  இயேலோகிம்:

                      வேதத்தின் முதல் வசனத்தில் நாம் வாசிக்கும் தேவனுடைய நாமம் இயேலோகிம் ஆகும்.இது ஆங்கிலத்தில் புழன என்றும்,தமிழில் தேவன் என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.இயேலோகிம் என்றால் “மகா பெலனுள்ளவர்” என்று பொருள்படும்.தேவனுடைய பெலம,மகத்துவம்,பராக்கிரமம்,ராஜரீகம் ஆகிய தன்மைகள் அனைத்தையும், இந்த நாமம் வெளிப்படுத்துகின்றபடியால் இது பன்மையில் வருகிறது.
           இப்படி பன்மையில்; வருகிறபடியால் சில குறுகிய நோக்குடையவர்கள் இது பல  தெய்வக் கொள்கைக்கு ஆதாரமானது என்று எண்ணுவதுண்டு,
எனினும் இயேலோகிம் என்;ற நாமம் பல தன்மைகளுடன் என்றும் விளங்கும் ஒன்றான மெய் தேவனை மட்டுமே குறிக்கிறது என்பதில் வேத ஆராய்ச்சியாளர்கள் ஒருமித்த கருத்துடையவர்களாயிருக்கிறார்கள்.இது தேவனுடைய தன்மைகளின் கூட்டுப் பெயர்.இது தேவனுடைய ஒரு பொதுவான பெயர்.இப்பெயரின் அறிமுகத்துடன் வேதம் ஆரம்பமாகிறது.




இயாவே




       வேதத்தின் இரண்டாவது அதிகாரத்திலேயே இந்த தேவனுடைய அதிமுக்கியமான நாமமாகிய “இயாவே”என்கிற நாமம் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இது ஆங்கிலத்தில் டுழசன என்றும் தமிழில் கர்த்தர் என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.இயாவே என்றால் இருக்கிறவராகவே இருக்கிறவர்(The Self Existing God) என்று பொருள்படும். ஆதாமின் காலத்திலிருந்தே மக்கள் இந்த நாமத்தை அறிந்து தொழுதுகொண்டு வந்த போதிலும்(ஆதி 4:26) மோசேயின் காலத்தில் தான் இந்நாமத்தின் பூரண அர்த்தம் தேவனால் வெளிப்படுத்தப்பட்டது(யாத்3:14,15). இது தேவனுடைய தனிப்பட்ட பெயராகும்.இத்தனிப்பட்ட நாமத்தினால் தான் இஸ்ரவேலர் தேவனை அறிந்திருந்தார்கள். இது வேதத்தில் சுமார் 7000 தடவை வருகிறது. உண்மையில் பழைய ஏற்பாட்டுக் காலத்திற்குட்பட்டவர்கள் அறிந்த ஒரே தேவனுடைய நாமம் இயாவே என்ற கர்த்தராகும்.



இயேகோவா:



         இந்த நாமம் பலராலும் தாராளமாக பயன்படுத்தப்பட்டு வந்த போதிலும் இது வேதத்தின் மூலத்தில் இல்லை. இது இஸ்ரவேலின் வேத குருக்களால் உருவாக்கப்பட்ட(Derived Name) நாமமாகும். என் நாமத்தை வீணிலே வழங்கவேண்டாம் என்ற கற்பனையினிமித்தம் அவர்கள் YAHWEH(இயாவே) என்ற நாமத்திலுள்ள A,E என்கிற இரண்டு உயிரெழுத்துக்களை மட்டும் நீக்கி விட்டு வாயால் உச்சரிக்க முடியாத YHWH என்கிற 4 எழுத்து நாமத்தை பயன்படுத்தினர். காலம் சென்ற பின்பு இதற்கு பதிலாக எஜமானன் என்னும் அர்த்தங்கொள்ளும் அதோனாய்(ADONAI) என்னும் எபிரேய நாமத்தைப் பயன்படுத்தினர்.சில காலம் சென்றபின்பு ADODAI என்னும் நாமத்திலுள்ள முதல் 3 உயிரெழுத்துக்களை YHWH என்ற நான்கெழுத்துக்குள் புகுத்தினர்.Y+A+H+O+W+A+H (YAHOWAH). இவ்விதமாக இயேகோவா என்கிற நாமம் வேதகுருக்களால் உருவாக்கப்பட்டு இன்று பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சில வேத மொழிபெயர்ப்புகளிலும்; இந்த நாமம் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.

இயேகோசுவா:



           புதிய உடன்படிக்கையின் காலத்திக்கென்று தேவன் கட்டளையிட்டதும் வெளிப்படுத்தியதுமாகிய நாமம் இயேகோசுவா என்பதாகும். இது ஆங்கிலத்தில் JESUS என்றும்
தமிழில் இயேசு என்றும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இயேசுவின் நாமம் இக்கிருபையின் காலத்தில் வாழும் தேவனுடைய பிள்ளைகளனைவருக்கும் மிகவும் இன்றியமையாத நாமமாகும். இது புதிய ஏற்பாட்டின் முதல் அதிகாலரத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
             இயேலோகிம் ,இயாவே என்ற இரு பிரதான நாமங்களின் வெளிப்பாட்டுடன் பழைய ஏற்பாட்டின் காலம் முடிவு பெற்றது.புதிய ஏற்பாட்டின் காலம் துவங்குவதற்கு முன்பாகவே இ;க்காலத்திற்குரிய நாமம் பரலோகத்தில் ஆயத்தமானது. இந்த நாமத்தை எடுத்துக் கொண்டு தேவதூதன் பூலோகத்திலுள்ள மரியாளிடத்திற்கும், யோசேப்பினிடத்திற்கும் அனுப்பப்பட்டான்.
             தூதன் கன்னியாகிய மரியாளை நோக்கி : நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக என்றான். பின்பு தூதன் அவளுக்கு நியமிக்கிப்பட்ட யோசேப்பை நோக்கி: அவள் ஒரு குமாரனைப் பெறுவாள்,அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக என்றான்.அப்படியே அக்குழந்தை பிறந்தபோது அதன் எட்டாவது நாளில் அதற்கு இயேசு என்று பேரிட்டடார்கள்(லூக்1:31,மத்1:21,லூக் 2:21).
             அந்த நாமமே புதிய உடன்படிக்கையின் காலத்தில் உட்பட்டவர்களுக்கு மீட்பின் நாமமாக தேவன் கட்டளையிட்டார். இந்த இயேசு என்ற நாமத்தின் அர்த்தமென்ன? அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்று வேதம் கூறுகிறது(மத் 1:21).
             இயேசு என்ற தமிழ்ப் பதத்திற்கு எபிரேயத்தில் இயேகோசுவா என்பதாகும். இயேகோசுவா என்றால் இயாவே சுவா ஆனார் என்று அர்த்தம். அதாவது கர்த்தர் இரட்சகரானார் என்று பொருள்படும். இயேசு என்கிற இப்புதிய உடன்படிக்கையின் நாமம் கர்த்தர் இரட்சகரானார் எனப் பொருள்படும். இயாவே இயேகோசுவாவானார்.
             காலத்தின் எல்லைக்குள்ளே தேவன் தம்முடைய இரு அதிமுக்கிய தன்மைகளாகிய 1.கர்த்தர் 2.இரட்சகர் என்ற அதிமுக்கிய தன்மைகளில் மட்டுமே மனுக்குலத்திற்குத் தம்மை வெளிப்படுத்துகிறார். நான் நானே கர்த்தர்,என்னையல்லாமல் இரட்சகர் இல்லை,கர்த்தாவே நீர் எங்கள் பிதாவும் எங்கள் மீட்பருமாயிருக்கிறீர்,இது பூர்வமுதல் உம்முடைய நாமம், என்று வேதம் கூறுகிறது(ஏசாயா 43:11  63:16).மேலும் கர்த்தர்:இப்போதும் யாக்கோபே உன்னை சிருஷ்டித்தவரும் இஸ்ரவேலே உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறவதாவது: பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன் என்கிறார்(ஏசா 43:1)சிருஷ்டிகர் உருவாக்குகிறவர் என்கிற நிலையிலுள்ள கர்த்தரே மீட்கிற இரட்சகராகவுமிருக்கிறார் என்பதை இவ்வசனங்கள் மிகவும் தெளிவாக்குகின்றன. பழைய ஏற்பாட்டின் சிருஷ்டிகர் புதிய ஏற்பாட்டின் இரட்சகராக வெளிப்பட்டபோது தான் அவருக்கு இயேசு என்னும் நாமம்; தரிக்கப்படுகிறது. தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார்.
               ஆதியிலிருந்;ததும் தேவனிடத்திலிருந்ததும் தேவனாகவேயிருந்ததுமாகிய வார்த்தையானது மாம்சமாகி இப்பூமியில் மனிதனானார். காணக்கூடாத அரூபியானதும், அதரிசனமாகியதுமாகிய தேவன் மனித ரூபமானாகக் காணப்பட்டார். ஆவியாயிருக்கும் நிலையில் சகலவற்றையும் சிருஷ்டித்த இயேலோகிம் என்ற தேவன் மனித ரூபத்தில் வெளிப்பட்ட நிலையில் இயேசு என்னும் நம்முடைய இரட்சகரானார்.இவரே முந்தினவரும் இவரே பிந்தினவருமாயிருக்கிறார். இவரே சிருஷ்டிகரும் இரட்சகருமாயிருக்கிறார்.இவரே கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிறார்.
           இதினிமித்தமே பெத்லகேமிலே இயேசு பாலகனாய்ப் பிறந்தபோது  அவருடைய பிறப்பின் செய்தியை மேய்ப்பர்களுக்கு அறிவித்த கர்த்தருடைய தூதன்: இன்று கர்;த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்கு தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார் என்றான் (லூக் 2:11)
            அவர் கர்த்தர், அவர் இரட்சகர், இந்த இரு தேவ தன்மைகளையும் தன்னுள் கொண்ட நாமம் தான் இயேசு என்னும் நாமம். கர்த்தரானவர் இரட்சகரானார் என்ற மகா உன்னதமான தேவ சத்தியத்தை வெளிப்படுத்தும் நாமம் இயேசுவாகும்.
            மேலும் இதை விளக்க புதிய ஏற்பாட்டில் இரண்டு முக்கியமான வசனங்களை நாம் குறிப்பிட வேண்டும்.




இயேசுவே கர்த்தர்:



                 இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக  இயேசுகிறிஸ்து கர்த்தர் என்று நாவுகள் யாவும்; அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்கு தந்தருளினார்.( பிலி 2:10,11)
                  காணக்கூடாத தேவன் காணக்கூடிய மனிதனாக அவதாரம் எடுத்து வந்த போது அந்த அவதாரப்புருஷனுக்கு இயேசு என்கிற பெயர் கொடுக்கப்பட்;டது. இந்த நாமத்தினால் வானோர், பூதலத்தோர் ,பூமியின் கீழானோர் அனைவருடைய முழங்கால்களும் முடங்க வேண்டும். அவர்களுடைய நாவுகள் யாவும் இயேசுகிறிஸ்துவை கர்த்தர் என்று அறிக்கைசெய்ய வேண்டும். இம்மூவுலகோரையும் படைத்தவரே இயேசு கிறிஸ்துவாக வெளிப்பட்டார் என்பதை இவர்கள் அறிந்து அவரைக் கர்த்தர் என்று வணங்கி அறிக்கையிட வேண்டும். முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் தேவனை அறிக்கைபண்ணும் என்று கர்த்தர் சொல்கிறார். (ரோ 14:11)
                  இயேசுகிறிஸ்துவே கர்த்தரென்று சிருஷ்டிகள் யாவும் அவரை அறிந்து வணங்கி அறிக்கை செய்வதினிமித்தம் இந்த இயேசுவின் நாமம் எல்லா நாமத்திற்கும் மேலான நாமமாயிருக்கிறது. இதற்குச் சமமாக ஒரு நாமமுமில்லை. எல்லா துரைத்தனத்திற்கும், அதிகாரத்திற்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்திற்கும் இம்மையில் மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்திற்கும் மேலாய் இயேசுவானவர் உயர்ந்திருக்கிறார் என வேதம் சொல்கிறது. இவ்விதமாக உயர்த்தப்பட்ட இயேசுகிறிஸ்து மாம்சத்தில் வந்ததை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல.
                  அந்திக்கிறிஸ்துவின் ஆவி அதுவே (1யோ4:3). ஒருவன் இந்த இயேசுகிறிஸ்துவைக் கர்த்தரென்று அறிக்கை செய்ய வேண்டுமானால் அவன் பரிசுத்த ஆவியின் மூலமாக மட்டுமே அப்படி செய்ய முடியும் என்று வேதம் கூறுகிறது. (1 கொரி 12:3)  . இயேசுவே கர்த்தர்!




இயேசுவே இரட்சகர்:

                           அவராலேயன்றி (இயேசுவாலேயன்றி) வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை. நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் மனிதர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படப்படவுமில்லை. (அப் 4:12)
                  சிருஷ்டிகள் யாவும் அவரை வணங்கி அவரே கர்த்தர் என்று அறிக்கைப்பண்ணும்படிக்கு அவருக்கு இயேசு என்னும் எல்லா நாமத்திற்கும்; மேலான நாமம் தந்தருளப்பட்டது. அதிலும் வானத்தின் கீழெங்குமுள்ள மனிதர்களுக்கு மட்டும் இரட்சிப்பை அருளும்படிக்கு இயேசு என்னும் ஒரே நாமம் கட்டளையிடப்பட்டது. தேவதூதர்கள் பாவஞ்செய்த போது தேவன் அவர்களைத் தப்ப விடவில்லை. ஆயினும் மனுக்குலம் பாவத்தில் விழுந்தபோது , அவர்களை அவர் இரட்சிக்க மனித ரூபம் எடுத்து வந்தார்.
                  பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார். பாவிகளை இரட்சிக்கும் நாமம் அவருக்கு சூட்டப்பட்டது. அந்த இயேசுவின் நாமத்தை விசுவாசித்து அவரை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். எம்மதத்தினவராயினும் எக்குலத்திவராயினும், எக்காலத்தவராயினும் இந்த இயேசுவின் நாமத்தினால் மட்டுமே அவர்களுக்கு இரட்சிப்பு உண்டு. இந்த இயேசு கர்த்தர்களில் ஒருவரல்ல. இவர் ஒருவரே கர்த்தர். இவர் இரட்சகர்களில் ஒருவரல்ல. இவர் ஒருவரே இரட்சகர். இவராலேயன்றி வேறு ஒருவராலும் இரட்சிப்பு இல்லை. இவர் நாமம் ஒன்றே பாவங்களை நீக்கி நம்மை இரட்சிக்கும். இயேசுவே இரட்சகர்!


நானே அவர்:



                  மாம்சத்தில் வெளிப்பட்ட இந்த இயேசு யார்? அவருடைய நாமம் யாருடையது? இதைக்குறித்து அவரே சொன்ன சில வசனங்களை நாம் நினைவுகூறுவோம். நான் என் பிதாவின் நாமத்தினாலே கிரியை செய்கிறேன் என்று இயேசு சொன்னார்(யோ 5:43, 10:25). இயேசு தமது சுய நாமத்தினால் வராமல் தம்மை அனுப்பினவருடைய நாமத்தினாலே வந்தார். அந்த தேவ நாமம் இயேசுவே. மேலும் அவர் பிதாவே உம்முடைய நாமத்தை அவர்களுக்கு தெரியப்படுத்தினேன். உம்முடைய நாமத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தினேன் என்றார்(யோ 17: 26,6) சீடர்கள் தெரிந்து கொண்ட நாமம் இயேசு. அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட நாமம் இயேசு.
                  அவர் வந்ததும், கிரியை செய்ததும்;, தெரியப்படுத்தியதும், வெளிப்படுத்தியதுமாகிய நாமம் இயேசுவே. இதுவே நித்தியமானவரும், சத்தியமானவருமாகிய தேவனுடைய நாமமாகும். இதினிமித்தமே இயேசுவானவர் நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம், என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான், நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள், என்றார் (யோ 8:24)
                  இக்காலத்தில் வாழும் நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரே தேவனுடைய ஒரே நாமம் இயேசுவாகும். இயேசுகிறிஸ்துவே மெய்யான தேவனும், நித்திய ஜீவனுமாயிருக்கிறார். இவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன் , என வேதம் கூறுகிறது ( 1யோ 5:20  ரோ 9:5)

நன்மைகள் தரும்:

                   பரலோத்தின் தேவனுடைய நன்மைகள் பூலோகத்திலுள்ள மனுமக்களுக்குக் கிடைப்பது இந்த இயேசுவின் நாமத்தினாலேயே. இந்த நாமத்தை அறிந்து ஏற்றுக்கொண்டவர்கள் இந்த நாமத்தினாலேயே சகல நன்மைகளையும் பெற்றுக்கொள்வார்கள். இந்த இயேசுவின் நாமத்தினால் நமக்கு கிடைக்கும் நன்மைகளில் சிலவற்றை நாம் இங்கே குறிப்பிடுகிறோம்.
1.இரட்சிப்பு – அப் 4:12  மத் 1:21  ரோ 10:13
2.மன்னிப்பு – அப் 10:43 கொலோ 1:14
3.சுத்திகரிப்பு – 1கொரி 6:11
4.பரிசுத்த ஆவி – யோவா 14:26 அப் 2:38
5.நித்திய ஜீவன் - யோ 20:31
6.நீதிமானாகுதல் - 1கொரி 6:11
7.தேவபிள்ளையாகுதல் - யோ1:12
8.தேவபிரசன்னம் - மத் 18:20
9.ஜெபத்திற்கு பதில் - யோ 14:13,14  16:24
10.சரீர சுகம் - அப் 3:16  4:10  யாக் 5:14,15
            இந்த நன்மைகளும் இன்னும் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள மற்ற நன்மைகளும் இந்த இயேசுவின் நாமத்தினால் மட்;டுமே நமக்கு கிடைக்கும். தேவ நன்மைகள் நம்; வாழ்க்கையில் வந்து நிரம்ப இயேசுவின் நாமத்தைத் தவிர வேறே நாமமில்லை.



நம் செய்கைகள்;:



           இந்த இயேசுவின் நாமத்தை அறிந்து அவருடைய பிள்ளைகளகிய நாம் இந்த நாமத்தைக் கொண்N;ட இப்பூலோக வாழ்க்கையில் செயல்படவேண்டும் என்று வேதம் போதிக்கிறது. வார்த்தையினாலாவது, கிரியையினாலாவது நீங்கள்  எதைச் செய்தாலும் அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து அவர் முன்னிலையாக பிதாவாகிய தேவனை ஸ்தோத்தரியுங்கள் (கொலோ 3:17). தேவனுடைய சிருஷ்டிகளில் தேவன் போல் செயல்படக்கூடிய ஒரே சிருஷ்டி மனிதன்; மாத்திரமே. நாம் வார்த்தையைக் கொண்டும் செயல்பட முடியும், கிரியையைக் கொண்டும் செயல்பட முடியும்.
            இவை யாவையும் நாம் இயேசுவின் நாமத்தினால் மட்டுமே செயல்படுத்த வேண்டும்.
            அப்படி நாம் செய்யவேண்டிய சில காரியங்களை இங்கே குறிப்பிடுவோம்.
1.விசுவாசி – யோ1:12  2:23  ரோ 1:7
2.தரித்துக் கொள் - அப் 15:14-16  2:38
3.ஒன்று கூடு – மத் 18:20
4.தொழுது கொள் - அப் 9:14  1கொரி 1:2
5.ஞானஸ்நானம் பெறு – மத் 28:19  அப் 2:38  8:15  10:48  19:5
6.ஜெபி – யோவா14:13,14  16:24
            7.துதி – எபே 5:20 எபி 13:1
     8.பிரசங்கி – லூக் 24:47  அப் 5:40-42
     9.பிசாசுகளைத் துரத்து – மாற் 16:17  லூக் 10:17
     10.பாடுபடு – மத் 10:22   அப் 5:41  1பேதுரு 4:14
            சுகல சிருஷ்டிகளும் வணங்கும்படிக்குத் தந்தருளப்பட்ட ஒரே நாமம் இயேசு. மனுக்குலம் இரட்சிக்கப்படும்படி கட்டளையிடப்பட்ட ஒரே நாமம் இயேசு. இப்புதிய உடன்படிக்கையின் காலத்திலுள்ள தேவனுடைய பிள்ளைகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட ஒரே நாமம் இயேசு. தேவனுடைய வாக்குத்தத்தத்தின் நன்மைகளை நமக்கு கிடைக்கச்செய்யும் ஒரே நாமம் இயேசு. தேவனுடைய பிள்ளைகள் எதைச்செய்தாலும் அவர்கள் பயன்படுத்தவேண்டிய ஒரே நாமம் இயேசு. இயேசுவின் நாமத்தை தவிர வேறே நாமமில்லை.
                  இந்த இயேசுவின் நாமத்தை அறிந்துகொள்ளுவோம், தரித்துக்கொள்ளுவோம், தொழுதுகொள்ளுவோம், எங்கும் பிரஸ்தாபிப்போம். வாழ்க இயேசுவின் நாமம்! வளர்க அந்நாமத்தின் பிரஸ்தாபம்!
                                                                                  -    ஆக்கியோன் சகோ.ஆர்தர் டேவிஸ்

Friday, 21 November 2014

நானும் என் வேதமும்(ஞானஸ்நானம்)

                     

                                                             “நானும் வேதமும்”(ஞானஸ்நானம்)


       (வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது 2தீமோ 3:16)
நான்: ஓ என் வேதமே! பரலோக இராஜ்யம் வர நான் என்ன செய்ய வேண்டும்?
வேதம்: இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறாவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.(யோவா 3:5)

Saturday, 1 November 2014

தேவத்துவமும் தேவனின் நாமமும்

  தேவத்துவமும் தேவனின் நாமமும்:

             தெய்வீகத்தைக் குறித்து அறிந்து கொள்வது கடினம்,முடியாத காரியம் என்று ஒரு காலத்தில் நினைத்திருந்தேன்.ஏனென்றால் இது கடற்கரை மண்ணில் குழி தோண்டி அதில் கடல்நீரை மொண்டு நிரப்ப முயற்சிப்பதற்கு சமம் என்று போதித்தார்கள்.ஆனால் யோவா 17:3 ல் ஒன்;றான மெய்த்தேவனாகிய (பிதாவாகிய) உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன் (பரலோகம் போகும் வழி) என்று இயேசு சொன்னதை வாசித்த பின்பு நான், பிதா யார்? குமாரன் யார்? அவர் நாமம் என்ன என்பதை அறிய முற்பட்டேன்.