Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, 16 January 2017

இப்படிக்கு கிறிஸ்தவன்

கிறிஸ்தவர்களை நினைத்தால் விநோதமாக இருக்கிறது.


அர்த்தமற்ற ஆங்கிலத்தில் பெயர் வைப்பார்கள்; அர்த்தமுள்ள தமிழ்ப்பெயரை அகற்றிவிடுவார்கள்.

வேதத்தில் எங்குமில்லாத ஆங்கில புத்தாண்டையும், கிறிஸ்துமஸ் என்ற பெயரிலிருக்கும் ரோம பண்டிகையையும் விழுந்து விழுந்து கொண்டாடுவர். தமிழ் புத்தாண்டையும், தமிழர் இனம் சார்ந்த மரபு பண்டிகைகளையும் அறவே வெறுப்பார்கள்.

நகையை கழட்டியே தீர வேண்டும் எனும் ஆங்கில கலாச்சாரத்தை ஏற்பார்கள். விருந்தோம்பல் முதலிய தமிழ்ப் பண்பாட்டை அசட்டை செய்வர்.

பொட்டு வைப்பது தவறென்று வசனமே எடுக்காமல் மணிக்கணக்கில் பேசுவர். அளவிற்கு மேல் துட்டு வைப்பது தவறென்று வசனம் சொன்னாலும் ஏற்கமாட்டர்.

ஆங்கில நாகரீகத்தை சபைக்குள் எல்லாவிதத்திலும் திணிப்பர். தமிழ் பெருமை  பற்றி பேசினால் உலகத்தான் என்பர்.

தேவன் படைத்த இயற்கை பூ வைத்தால் தவறாம். பிளாஸ்டிக்கில் தலையில் ஏதாவது மாட்டிக்கொண்டால் சரியாம்.

கிறிஸ்தவர்களே, உங்களுக்கு ஒன்று தெரியுமா? இங்கிலாந்துக்கு முன்னே இந்தியாவுக்கு வந்தது சுவிசேஷம் , தோமா மூலம்.

வேதம் தான் நம் மாதிரி. ஆங்கிலேயக் கொள்கைகள் அல்ல.

உலகமே மேல் நாட்டு மோகத்தில் திளைத்துக் கொண்டிருக்க, நீயும் அங்கிருக்கும் கொள்கையையே ஆதரிக்கிறாயே ஏன்?

இயேசு ஒரு யூதனாக பிறந்து யூத ஒழுங்கை கடைபிடித்து யூதனாகவே மரித்தார். கிறிஸ்தவனோ தமிழனாகப் பிறந்து ஆங்கிலக் கொள்கை பயின்று அரை ஆங்கிலனாக மரிக்கிறான்.

ஆங்கிலத்தின் மேல் வைத்திருக்கும் வைராக்கியத்தை ஆண்டவர்மேல் வைத்திருந்தால் தமிழர்கள் என்றோ இரட்சிக்கப்பட்டிருப்பார்கள்.

இப்படிக்கு,

கிறிஸ்தவன்

Tuesday, 3 November 2015

தம்பி நீ என்ன சாதி?

தம்பி நீ என்ன சாதி?
நான் மறவன்.
இயேசுவின் அன்பை ஒருபோதும் மறவன்.
நான் நாடான்.
உலக பொருளை நாடவே நாடான்.
நான் பறையன்.
இயேசுவின் புகழ் பறைசாற்றும் பறையன்.
நான் பள்ளன் .
இயேசுவுக்காக பள்ளு பாடுவதால் பள்ளன்.
நான் பிள்ளை.
இயேசுவின் செல்லப் பிள்ளை.
நான் கோனான்.
இயேசு என்னை ராஜாவாக்கியதால் கோ நான் .
நான் ஐயங்கார்.
கொஞ்சமும் ஐயமில்லாததால்
இயேசுவை அப்பா என்பதால் தேவர் மகன்.
திறப்பிலே நிற்பதில் முதலியன்.
நீங்க என்ன சாதி ணே??
ஙே!!!!

Wednesday, 20 May 2015

அந்த 21 பேர்

திடகாத்திரமானவர்கள்!
தீவிரமானவர்கள்!
அவர்கள் வாலிபர்!
உடல் வாகைப் பார்த்தால் செல்வந்தர்!

ஆனாலும் அந்தோ பரிதாபம்!!


கல்வியிலும் பல கலைகளிலும் தேர்ந்தவர்கள்!
கொள்கைப் பிடிப்பு மிக்கவர்கள்!
உயிருக்கு அஞ்சாதவர்கள்!
தாமதம் அறியாதவர்கள்!

ஆனாலும் அந்தோ பரிதாபம்!!



கண்களில் பயமில்லை!
கைகளில் நடுக்கமில்லை!
சிந்தையில் குழப்பமில்லை!
செயலில் தயக்கமில்லை!

ஆனாலும் அந்தோ பரிதாபம்!!


சீராக சீருடை அணிந்திருந்தனர்!
வேகமாக நடந்து வந்தனர்!
தங்களுக்குள் பேசிக் கொண்டனர்!
இறுதியாக முழக்கமிட்டனர்!

ஆனாலும் அந்தோ பரிதாபம்!!



அவர்கள் முடிவு அறிகையில் நெஞ்சம் கனத்தது,
இதயம் துடித்தது, மனது வலித்தது

ஆம் அவர்களின் முடிவு சோகமானது, கோரமானது

அந்த 21 பேர் அந்த 21 பேர்,
அவர்கள் கிறிஸ்தவர்களை கொன்ற தீவிரவாதிகள்.





அவர்களா பாவம்? பின்னே செத்தவர்களா பாவம்?

Monday, 23 March 2015

சகோதரனிடமிருந்து சகோதரிக்கு

சுடிதாரின் பின்னால் முடிச்சு வைப்பதேனம்மா?
நீ கட்டவா? பிறர் அவிழ்க்கவா?

சட்டையில் சன்னல் எதற்கம்மா?
காத்துப் போகவா? பிறர் பார்த்துப் போகவா?

காற்றில்லாமல் வாழலாம்

            

காற்றில்லாமல் வாழலாம் உம் பாசம் என்னும் சுவாசத்தால்

தண்ணீரில்லாமல் வாழலாம் நீர் ஜீவ ஊற்றாய் இருப்பதால்

கிறிஸ்துமஸ் கவிதை

கிறிஸ்துமஸ்  கவிதை

(நண்பன் அமல்ராஜ் அனுப்பியது)


உலகாள நீ வருவாய் என்று
உலகமே காத்திருக்க
ஊழியனாய் நீ வந்தாய்
உலகத்தாரை வாழவைக்க