காதலிக்கலாமா பிரதர்? Kaathalikalaamaa Brother?
வாலிபர்களிடத்திலே என்ன கேள்வியென்றாலும் மனம் விட்டுக் கேளுங்கள் என்றவுடன் அவர்கள் இரகசியமாக வந்து காதை கடிப்பது காதலிக்கலாமா பிரதர் என்பதாகத் தான் இருக்கிறது. அநேக கிறிஸ்தவ வாலிபர்களுக்கு காதலிப்பது சரியா?தவறா? என்பதில் மிகப்பெரிய குழப்பம் இருக்கிறது. சில வாலிபர்கள் உன்னைப்போல பிறனை நேசி என்னும் வசனத்தை தவறாகப் புரிந்து கொண்டு பார்க்கிற பேசுகிற பெண்களையெல்;லாம் நேசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். காதலித்தால் எதிர்காலம் பாழாகும் என்றால் காதலித்து திருமணம் செய்தவர்கள் வாழ்க்கை நன்றாகத் தானே இருக்கிறது என்கிறார்கள் மேவாயைத் தேய்த்துக் கொண்டே. காதலி;த்து திருமணம் செய்து கொண்ட சிலரின் வாழ்வும் முன்னுதாரணம் சொல்ல இவர்களுக்கு தோதாகிறது. ஆனால் உண்மையில் காதலித்து திருமணம் செய்து கொள்கிறவர்கள் எல்லாரும் மகிழ்ச்சியாகத் தான் வாழ்;கிறார்களா? காதல் செய்வது சரிதானா? காதலிக்கக்கூடாதென்று வேதத்தில் எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா? வேதாகமத்தில் யார் யாரெல்லாம் காதலித்தார்கள்? காதல் வருவதற்கான காரணம் என்ன?அதை மேற்கொள்ளும் வழி என்ன? இது போன்ற காதலைக்குறித்த கருத்துக்களை வேதாகமம் துணைகொண்டு தெளிவுபடுத்துவது தான் இப்பதிவின் நோக்கமாகும்.தொடர்ந்து வாசியுங்கள் தேவன் தாமே உங்களோடு இடைபடுவாராக…
முதலில் காதல் என்பதற்கான உண்மையான அர்த்தத்தை நாம் உணர்ந்து கொள்வது அவசியமாகும்.காதல் எவ்வயதிலும் எதன் மீதும் வரலாம். (நான் கூட இசையை காதலிக்கிறேன்)அவ்வகையில் காதல் தவறல்ல.ஆனால் பதின் வயதின் பருவ மாற்றத்தில் வரும் எதிர் பாலின ஈர்ப்பை எப்படி காதலென்று ஏற்றுக்கொள்ள முடியும்? இவ்வகையில் நான் காதலுக்கு எதிரி.இந்த ஆண் பெண் காதலைப் பற்றி தான் நாம் அலசப்போகிறோம்.
உண்மையில் காதலித்து திருமணம் செய்து கொள்கிறவர்கள் எல்லாரும் மகிழ்ச்சியாகத் தான் வாழ்;கிறார்களா? ஒரு சிலர் மகிழ்ச்சியாகத் தான் வாழ்கிறார்கள். ஒரு சிலர் மகிழ்ச்சியாக வாழ்வதைப் போல் தங்களைக் காண்பித்துக் கொள்கிறார்கள். அவர்கள் மனதின் ஆழத்தில் அவசரப்பட்டு விட்டோமோ என்கிற எண்ணம் இருப்பது உண்மைதான்.பெற்றோர் பார்த்த திருமணம் என்றால் உதவுவதற்கு அவர்கள் இருக்கிறார்கள்.ஆனால் காதல் திருமணத்தில் அதற்கு வாய்ப்பிருக்காது. காதலால் தன் உறவினரை இழந்து தனியே வாழ்பவரிடம் பேசிப் பார்த்தால் விஷயம் புரியும்.
காதல் செய்கிற ஒவ்வொருவரும் தன் வாழ்வில் ஏதோ ஒன்றை சாதித்ததாக கற்பனை செய்து கொள்ளுகிறார்கள்.ஆனால் உண்மையில் ஏதோ ஒன்றை இழக்கத்தான் செய்கிறார்கள்.சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் தேவனுடைய சித்தத்திற்கு காத்திருக்கும் நாம் வாழ்வின்; முக்கிய பகுதியில் அவரை ஒதுக்கிவிட்டு நம்முடைய கண்களுக்கு ஏற்றவைகளை செய்யும் போது தான் நம் வாழ்வில் நஷ்டம் வருகிறது.வேதத்தில் லோத்து தன் கண்களுக்குப் பிரியமான நிலத்தை தேர்ந்தெடுக்கிறான்(ஆதி 13:10,11).இறுதியில் தன் மனைவியை இழந்து திரும்புகிறான்.நாமும் இந்த வாலிப வயதில் கண்களுக்கு பிரியமானதை தேர்ந்தெடுப்பதால் பின்னாளில் அதை உணர்ந்து ஓடி வந்தாலும் நம் திறமை,இலட்சியம்,அந்தஸ்து,வாய்ப்பு எல்லாவற்றையும் இழந்து விடுகிறோம்.சாதிக்க வேண்டிய வயதில் காதலித்தவர்கள்(சாதிப்பதாக நினைத்துக் கொண்டு) எல்லாருமே பின்னாளில் புலம்புவதை நாம் கேட்டிருப்போம்.பார்க்,பஸ்,காலேஜ்களில் லவ்விக் கொண்டிருப்பவர்களை பாவம் யாரு பெத்த பிள்ளையோ என்று நாம் நினைக்க அவர்கள் தாங்கள் ஏதோ பெரிய வேலையை செய்வதாக கற்பனை செய்துகொண்டிருப்பது உண்மையிலேயே பரிதாபம் தான்.
காதலிப்பவர்களிடம் பேசும்போது அவர்கள் சொல்லும் இன்னொரு முக்கிய காரியம், “இந்த வயசுல லவ் பண்ணாம எப்போ பண்றதாம்”. நான் அவர்களிடம் சொல்வது உண்மையிலேயே காதலிக்க வேண்டிய வயது இதுவல்ல. காதலிக்க காலமெல்லாம் வாய்ப்பிருக்கிறது. ஆனால் இந்தக் காலத்தில் செய்ய வேண்டிய செயலை செய்யாதிருந்தால் காலம் மீண்டும் வாய்ப்பு கொடுக்காது. வாலிபக் காலத்தில் தான் படிக்க முடியும்; திறமையை வளர்க்க முடியும்;;;;;;;; முன்னேற முடியும்; தேவனுக்காய் வாழ முடியும்.இப்படி எத்தனையோ இந்தக் காலத்தில் செய்ய வேண்டியதைச் செய்யாமல்,செய்யக் கூடாத காதலை செய்து கொண்டிருக்கிறோம்.இன்னொரு சாரர் சொல்கிறார்கள் “காதல் செய்வதில் த்ரில் இருக்கிறதாம்”.காதலில் மட்டுமல்ல எல்லா பாவத்திலும் திரில் இருக்கத்தான் செய்கிறது. விபச்சாரம் செய்தாலும் திரில் இருக்கும். எப்போதுமே திருட்டுத் தண்ணீர் தித்திக்கத்தான் செய்கிறது.திரில் திகிலாக மாறுமுன் திருந்துவது நல்லது. சிலருடைய கருத்து “சும்மா இருப்பதால் வாழ்வில் சுவாரஸ்யம் இருப்பதில்லை,காதலிப்பதில் தான் கிக் இருக்கிறது”.இவர்கள் சும்மா இருப்பதால் தான் இப்படி யோசிக்கிறார்கள். சுறுசுறுப்பானவர்களுக்கு வாழ்வு எப்போதுமே சுவாரஸ்யம் தான். நமது அக்காள் தங்கையை யாரும் காதலித்துவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் நாம் அடுத்தவனின் அக்கா தங்கையை காதலிக்க கருத்தாய் அலைவது என்ன வகையில் நியாயம்(லூக்கா 6:31).பிறனுக்குள்;ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக(யாத் 20:17) என்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.பிறனுடைய மனைவியையும் இச்சிக்கக்கூடாது.அதே நேரத்தில் பிறன் மகளையும்,சகோதரியையும் கூட இச்சிக்கக்கூடாது.(யோபு 31:9)
வேதாகமத்தில் யார் யாரெல்லாம் காதலித்தார்கள் அவர்கள் காதலித்ததால் என்ன நிகழ்ந்தது என்று பார்த்தால் யாக்கோபு ராகேலை நேசித்த படியினால் ஏமாற்றப்பட்டு பின்னும் ஏழு வருடம் சேவித்தான்(ஆதி 29:30). காதலிக்கிறவர்கள் தன்மானத்தை இழக்க வேண்டியுள்;ளது.சுயமரியாதையை விட்டுக் கொடுக்க வேண்டியுள்ளது என்பதை இது உணர்த்துகிறது. பெற்றோருக்காக கால் மணிநேரம் கூட காத்திருக்க முடியாதவர்கள் காதலிக்காக கால் கடுக்கக் காத்திருக்கிறார்கள்.காதலி முன் கர்வமெல்லாம் காணாமல் போகிறது.தன்மானம் தலைதெறிக்க ஓடுகிறது.
ஏமோரின் குமாரனாகிய சீகேம் மிகுந்த மேன்மையுள்ளவனாயிருந்தான்.(ஆதி 34:19)ஆனால் தீனாளிடம் தன்னை இழந்ததால்(ஆதி 34:3)தன் மேன்மையையும் இழந்து உயிரையும் இழந்தான்.அவன் உயிர் மட்டுமல்ல அவன் இனத்தாரின் உயிரும் இந்த அற்ப ஆசையால் பறிபோனது(ஆதி 34:25).காதல் காதலிப்பவனை மட்டுமல்ல அவன் உறவினர்களையும் பாதிக்கக்கூடியது.அவனை சார்ந்திருப்பவர்களையும் அவமானப்படுத்தக் கூடியது.அனைவரையும் அழவைக்கக்கூடியது.
நியாயாதிபதியின் புத்தகத்திலே நாம் பார்க்கும்பொழுது, தேவன் சிம்சோன் எனும் மனுஷனை ஒரு பெரிய நோக்கத்திற்காக தெரிந்தெடுத்தார்(நியாதிபதி13:5).பெலிஸ்தர்களை அழிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அவன் பெலிஸ்தர் கரங்களிலே மடிந்து போவது பரிதாபகரமானதாகும்.தெலீலாளை நேசித்ததற்கு அவன் கொடுத்த விலை அவனது விலைமதிக்கமுடியாத உயிர்.காதலால் தேவநோக்கம் சிதைகிறது.நம் ஒவ்வொருவர் மேலும் தேவன் விசேஷித்த நோக்கம் வைத்திருக்கிறார்.அது நிறைவேற பாடுபடவேண்டிய நாம் காதலோடு போராடிக் கொண்டிருக்கக்கூடாது.இதே சிம்சோன் திம்னாத்து ஸ்தீரியின் மேல் வைத்த நேசம் அவனை நஷ்டப்படுத்தியதும்(நியா 14)நமக்குத் தெரிந்ததுதான். தேவன் மிகுந்த பிரியம் வைத்து அளவில்லாத ஞானத்தை அள்ளிக் கொடுத்திருந்த சாலொமோனும் அநேக பெண்களை நேசித்ததினால் தேவ கோபத்திற்கு ஆளானான்.ராஜ்யபாரம் பிடுங்கப்பட்டது.பெண்கள் மேல் அவன் வைத்த சிநேகம் தேவனைவிட்டு அவனை விலகச் செய்து அந்நிய தேவர்களை பின்பற்றச் செய்தது (1இராஜா11:1-5). காதல் தேவன் மேலுள்ள பாசத்தை,அன்பை,ஐக்கியத்தை பறிக்க ஏதுவானது. அம்னோன் தாமாரை நேசித்தான்.(2சாமு12:1)இறுதியில் தன் சொந்த சகோதரனால் கொல்லப்பட்டான்.ஆன்ம நண்பர்களை பிரித்து விடும் ஆற்றல் காதலுக்குண்டு.கல்லூரிகளில் நண்பர்களுக்கிடையில் நடக்கும் பெரும்பாலான மோதல்களில் காதலின் பங்கே அதிகம்.
இந்;த வாலிப வயதில் காதல் தவறு என்றும்,வேதாகமக் காதலைப் பற்றியும் பார்த்தோம்.இனி காதலில் விழாமல் தப்பிப்பது எப்படியென்று பார்க்கப்போகிறோம்.அதற்கு முன் நாம் அலச வேண்டிய ஒன்று காதல் ஏன் வருகிறது. அதிலும் விசேஷமாக வாலிபர்களுக்கு ஏன் காதல் வருகிறது? காரணம் இல்லாமல் வருவதுதான் காதல் என்று சிலர் சொல்வார்கள்.என்னுடைய கேள்வி காரணமே இல்லாமல் காதல் வருவதற்கான காரணம் என்ன? இவ்வுலகில் நடைபெறும் எல்லா விஷயங்களுக்குமே நிச்சயம் ஒரு காரணம்; இருக்கும்.காரணமேயில்லாததற்கும் காரணம் உண்டு. சரி இப்போ விஷயத்துக்கு வருவோம்;. டீன் வயதில் காதல்வயப்பட தன்னிகரற்று விளங்கும் முதல் காரணம்; ஹார்மோன்கள் தாம். நமது கலாச்சாரத்தில் ஆண் குழந்தைகளும், பெண் குழந்தைகளும் சிறுவயதில் ஒன்றாக விளையாட,படிக்க,பேச அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களும் எவ்வித சங்கோஜமும் இல்லாமல் அந்நியோந்நியமாகப் பழகுகிறார்கள். ஆனால் திடீரென்று ஒரு குறிப்பிட்ட வயதில் அவர்கள் பாசத்தின்மேல் திரை விழுகிறது. அந்நியோந்நியத்திற்கு அளவுகோல் வைக்கப்படுகிறது. விதிமுறைகள் நெருக்குகிறது. ஒரு ஆண் பெண்ணிடம் மனம் விட்டுப் பேசும் வாய்ப்பு பறிபோகிறது. பெண்களும் இயல்பானவர்கள் தான் என்கிற எண்ணம் மாறி அவர்களை விசித்திரமாய் பார்க்கும் மனோபாவம் ஏற்படுகிறது.இதே நிலை தான் பெண்களுக்கும். இந்த இடைவெளியில் இருவரது உடலிலும் பருவ மாற்றங்கள் ஏற்படுவதால்,அப்பிரிவு நிரந்தரமாகிறது. இருவரும் மற்றவர்களை அதிசயப் பொருளாய் பார்க்க ஆரம்பித்து விடுகின்றனர். ஆண் பெண் மத்தியில் அநேக இரகசியங்கள் இருப்பதாய் இருபாலருக்கும் தோன்றுகிறது. சிறுவனாயிருக்கும் போது சிறு விஷயத்திற்கும் பெண்ணிடம் சண்டை போட்டவன், விட்டுக் கொடுக்கத் தொடங்குகிறான்.வெட்கப்பட ஆரம்பிக்கிறான்.நல்ல பெயர் வாங்கத் துடிக்கிறான்;நடிக்கிறான். தன்னிடம் இல்லாத ஏதோ ஒன்று அவளிடம் இருப்பதாக உணர்கிறான். முன்பு அவளது சிரிப்பை அலட்சியம் செய்தவன்,இப்போது அவள் சிரிப்பில் பூரிக்கிறான். பெண்களிடம்; பேசுவதை ஒரு பொருட்டாகவே மதிக்காதவன்,அதில் மகிழ்கிறான். இதற்கிடையே தேவன் இயற்கையாகவே இனவிருத்திக்காக ஏற்படுத்தியிருக்கும் ஹார்மோன் தூண்டுதலும் அவனைத் தடுமாற வைக்கிறது. நண்பர்களும் தங்கள் பங்குக்கு தூண்டிவிடுவதால், தன்னிடம் பேசும்,தன்னை பார்க்கும்,தான் பேச வாய்ப்பு கிடைக்கும்,தான் அடிக்கடி பார்க்கும் பெண்ணை ஏதோ ஒரு உந்துதலோடு நேசிக்கத் தொடங்குகிறான். பார்க்கும் படங்களாலும்,நண்பர்களின் வீண் ஆலோசனையினாலும் அதை காதல் என்று கற்பனை செய்யத்தொடங்குகிறான். இது பெண்களுக்கும் பொருந்தும். டீன் வயது காதலுக்கான காரணம் பெரும்பாலும் இதுதான்(பெண்ணை அதிசயப் பொருளாகவே பார்ப்பதால் திருமணம் வரை அவளில் எந்த குறையும் காணாமல் இருக்கிறான்.மணமுடிந்த பின்பு மீண்டும் இயல்பானவளாகத் தோன்றுவதால் குறைகள் தெரிய ஆரம்பிக்கிறது)... இதெல்லாம் உலகத்திற்குரிய காரியங்களாயிருக்கிறது.வேதம் சொல்கிறது,நாம் உலகத்துக்குரியவர்கள் அல்ல(யோவான்17:16) உலகத்தில் சாதாரண மனிதர்கள் செய்கிற காரியத்தை நாமும் செய்தால் நம் விலையேறப்பட்ட இரட்சிப்பு வீண் என்றாகிவிடுமே. தேவனுக்காக பட்டணத்தை பிடிக்கிறேன் என்று சொல்வதை விட மனதை அடக்குவதே உத்தமம்(நீதி 16:32).நண்பன் ஒருவன் தான் ஒரு பெண்ணைக் காதலிப்பதை பெரிய சாதனை நிகழ்த்தியதுபோல பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தான். நான் அவனிடம் காதலிப்பது கடினமா? காதலிக்காமல் இருப்பது கடினமா? என்று கேட்டேன்.சற்று யோசித்துவிட்டு காதலிக்காமல் இருப்பது தான் கடினம் என்றான்.உடனே சொன்னேன் கடினமான செயலை செய்வதுதான் சாதனை. காதல் என்பது இயல்பான உணர்வு.அதை வெளிப்படுத்துவது அல்ல,கட்டுப்படுத்துவதே சாதனை.யார் நினைத்தாலும் (அவர் தகுதிக்கேற்ப) காதலித்து விடலாம். ஆனால் எல்லோராலேயும் காதலிக்காமல் இருக்க முடிவதில்லை. மனம்போன போக்கில் போவது அல்ல,மனப்போக்கை கட்டுப்படுத்துவது தான் சாதனை.
வேதம் ஒரு ஆணுக்கு பெண் நியமிக்கப்படுவதைப் பற்றி கூறுகிறது.(அவன் பெற்றோர், உறவினர் மூலம்). ஆனால் நியமிப்பதை ஆதரிக்கவில்லை(அவனே அவனுக்கு) நியமிப்பதைப் பற்றி வேதம் சொல்லும் விஷயங்கள் நம்மைப் பதற வைக்கின்றன்.(உபா 20:7).(உபா 28:30). எனவே நாமே நமக்கு நியமிக்காமல் கொஞ்சம் பொறுத்து இருந்தால் நம் பெற்றோர் நமக்கு நியமிப்பார்கள். நம்முடைய நலனையே தங்கள் முழு நோக்கமாகக் கொண்டு உழைக்கும் பெற்றோருக்கு நம்மால் செய்ய முடிந்த மரியாதை திருமண விஷத்தில் அவர்கள் பேச்சைக் கேட்பது தான். காதலுக்காக பெற்றோரை விட்டு விட்டு ஓடுவதை விட பச்சைத் துரோகம் வேறெதுவும் இருக்க முடியாது. நம்முடைய சந்தோஷத்தில் சந்தோஷம் கொள்ளும் அவர்கள் நிச்சயம் நமக்கு தீங்கு நினைக்க மாட்டார்கள். நம்மை விட அனுபவத்திலும் அறிவிலும் அக்கறையிலும் மேலோங்கிய அவர்கள் நமக்கு இவ்விஷயத்தில் உதவ அவர்களுக்கு நாம் உதவ வேண்டும்.
பெற்றோருக்கு மட்டுமல்ல தேவனுக்கும் விரோதமானது தான் இந்த ஆண் பெண் காதல். அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து,(லூக் 10:27) என்று வேதம் சொல்கிறதே. காதலிக்கிறவர்களால் முழு இருதயத்தோடும் முழு சிந்தையோடும் முழு பலத்தோடும் அன்பு கூற முடியுமா? முழு என்றால் என்ன, பகிர முடியாத எனக் கொள்ளலாம். வேறெந்த காரியத்திற்கும் சிறிதும் இடங்கொடாதது தான் முழு எனில் நிச்சயமாக காதலிப்பவர்கள் தேவனை முழு இருதயத்தோடு அன்பு கூற முடியாது. அப்படி முழு இருதயத்தோடு அன்பு கூர்ந்தால் காதலிக்கமுடியாது. காதலி அல்லது காதலனிடம் அன்பை பகிர்;ந்து கொண்டால், முழு என்பது உடைந்து விடும். இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய முடியாது என லூக்கா 16:13 சொல்கிறது. ஒருவனை சிநேகித்தால் ஒருவனை பகைக்க வேண்டி வரும். என்னிடம் சில வாலிபர்கள் கூறுவது, “இப்போதெல்லாம் ஜெபம் பண்ணவே முடியறதில்ல. ஜெபம்பண்ண உட்கார்ந்தாலே அவ ஞாபகம் தான் வருது” தேவ அன்பிலிருந்து நம்மை பிரிக்கும் பெரிய தந்திரமாக காதல் இருப்பதால் நம்மிடம் கவனம் தேவை.
இப்போது உங்கள் மனதில் எழும் ஒரு கேள்வி, முழு இருதயத்தோடு அன்பு கூற வேண்டும் என்றால்,என் தாயையோ, தந்தையையோ நேசிக்க முடியாதோ என்று. தாய், தகப்பனையோ ,நண்பர்களையோ, மனைவியையோ நேசிக்கவும் கனப்படுத்தவும் மனம்கோணாமல் நடந்து கொள்ளவும் கீழ்ப்படியவும தான் வேதம் கற்றுத்தருகிறது.(1சாமு20:17)(நீதி 17:17)(நீதி 18:24);(நீதி 30:17)(நீதி-23:22)(நீதி 1:8)(எபே 5:33)(கொலோ 3:19) .உறவுகளையும் சிநேகிதர்களையும் ஏற்படுத்தியிருப்பது தேவனே என்பதால், அவர்களை நேசிப்பது தேவ கட்டளையை பின்பற்றுவது. தேவ கட்டளையை கைக்கொள்வது தேவனிடத்தில் அன்பு கூறுதலின் பகுதியே என்பதால்(யோவான்14:15) மனைவியையோ தாய்தகப்பனையோ,நண்பர்களையோ நேசிப்பது தவறல்ல. ஆனால் வேதத்தில் குறிப்பிடப்படாத காதலி (அ)காதலனிடத்தில் அன்புகூறுவது தேவ கட்டளைக்கு விரோதமானதாகும். மேலும் எவரொவருக்கும் ஜெபம் அல்லது வேத தியானம் செய்யும்போது மனைவி தாய் தந்தை பற்றிய நினைவு அதை பாதிக்காது. ஆனால் காதலி காதலனின் நினைவு வெகுவாக பாதிப்பதில் நமக்கு புரியும் விஷயம் காதல் தேவன் விரும்பாதது.
ஆதலால், கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவெனில், மற்றப் புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடவாமலிருங்கள்.(எபே 4:17) வேதம் கூறும் அநேக சட்டங்களில் சில உலக சட்டங்களாக இருக்கின்றன.இன்னும் சில உலக சட்டங்களை விடவும் உன்னதமானவைகளாக இருக்கின்றன.(உதாரணம் : கன்னத்தில் அறைந்தால் கன்னத்தை காட்டுவது) அது போன்றது தான் காதலும். ஒருவேளை மேஜர் காதலை உலகமும் போலீசும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் வேதம் அங்கீகரிப்பதில்லை.
இப்பதிவிட முக்கிய நோக்கம் கிறிஸ்தவர்களில் அநேகர் காதலிக்கலாமா இல்லையா என்பதில் பெரிய குழப்பம் கொண்டுள்ளனர். வேதத்தின் படி உண்மையாய் வாழ வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் காதலிப்பது தவறு. தொடர்ந்து வரும் பதிவுகளிலும் அலசுவோம். அல்லேலூயா.
காதலிக்கக் கூடாதென்ற நேரடி வசனம் வேதத்தில் இருக்கிறதா?
காதல் வருவதற்கான காரணிகள் எவை?
காதல் செய்வதற்கு தகுதியானவர் யார்?
காதலை மேற்கொள்வது எப்படி?
ஏற்கனவே காதலித்துக் கொண்டிருக்கும் நான் என்ன செய்வது?
தெரிந்தவர்கள் காதலை சொன்னால் என்ன செய்யலாம்?
போன்ற விஷயங்களை தொடர்ந்து வரும் பதிவுகளில் அலசுவோம்.
Super
ReplyDeleteVery nice message bro..... It's true love ur beloved Christ.....
ReplyDeleteBro,,I need u r help ,,contact me,,,ebinesar 102@ gmail.com,,,plzz
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete