Wednesday, 23 December 2015

கிறிஸ்துமஸ் எப்படி கொண்டாடலாம்?

கட்டாயமாக கிறிஸ்துமஸ் கொண்டாடுபவர்களுக்கு மட்டும்


கிறிஸ்துமஸ் எப்படி கொண்டாடலாம்?

இயேசு எப்படி பிறந்தார் என்று தியானிப்பதை விடுத்து ஏன் பிறந்தார் என நோக்கலாம்.....

எந்த சூழ்நிலையில் அவர் பிறந்தார் என்பதை விட எந்த சூழ்நிலையை உருவாக்க அவர் பிறந்தார் எனப் பேசலாம்....

கோபுரத்தில் விளக்கேற்றுவதற்கு பதில் ஏழைகளின் வீடுகளில் விளக்கேற உதவலாம்.....

புத்தாடை அணிவதை விடவும் இல்லாதோர்க்கு அணிவிக்கலாம்....

எளிமை உணர்த்தும் குடிலை பெரு செலவில் உருவாக்குவதை விடவும் எளிமையானோர்க்கு இயன்றதைச் செய்யலாம்..

கேரல் ரவுண்டை காசு பிரிக்க அல்லாமல் இயேசு அறிவிக்க பயன்படுத்தலாம்...

பட்டாசு கொளுத்தி மகிழ்வதை விடவும் நமது பாவங்களைக் கொளுத்தி அவரை மகிழ்விக்கலாம்....
( www.praburathna.blogspot.com)

இயேசுவை தூங்க வைப்பதை ( அவர் தூங்குவதும் உறங்குவதுமில்லை) விட்டு விட்டு தூங்கிக்கிடக்கும் பலரின் மனக்கண்களை திறக்க முயற்சிக்கலாம்...

சுவிசேஷத்தை அறிவித்து பரலோகில் மகிழ்ச்சி உண்டாக்கலாம்.....

முதல் வருகையை ஒப்பிட்டு இரண்டாம் வருகை குறித்து விவரிக்கலாம்...
( www.praburathna.blogspot.com)

இயேசு தம்மைக் கொடுக்க உதித்த இந்நன்னாளில் நம்மை அவருக்களிக்கலாம்...நம்மிலுளதை பிறர்க்களிக்கலாம்..


இப்படிச் செய்வதே நீங்கள் கொண்டாடும் இயேசுவை குளிர்விக்கும்...


நல்ல இந்த விடுமுறை தினத்தை நன்மையாக பயன்படுத்துவோம் ......நன்றி..
                                 - Prabu rathna

Thursday, 5 November 2015

கீழ்சாதி இரத்தம் சாக்கடையல்ல

சிறுகதை

"கீழ்சாதி இரத்தம் சாக்கடையல்ல"

சுகன்யா தன் தந்தை கிறிஸ்டோபரின் மார்பில் படுத்திருந்தாள்...

எப்போதும் அவள் அப்படித்தான்.தாயில்லாத குழந்தையாதலால், அப்பாவின் மேல் சற்று அதிகமாகவே நேசம் வைத்திருந்தாள்.
 இரவு நேரங்களில் அப்பாவை கட்டிப்பிடித்தபடியே தான் உறங்குவாள்....

தந்தையின் மார்பில் கிடந்தவாறே, மழலைக்குரலில் கேட்டாள் "ஏன்ப்பா?சுந்தரம் அங்கிள்ட்ட நான் பழகுறது உங்களுக்கு பிடிக்கல?"

"அவனைலாம் அங்கிள்னே சொல்லாத"

"ஏன்ப்பா அவங்க ரொம்ப நல்லவங்க பா"

"ஐயோ! சுகி ,அவன் கீழ் சாதி மா...அவன்ட்டலாம் பேசி ஏன் செல்லம் என்ன கேவலப்படுத்துற?"

"எல்லா சாதிக்கும் ஒரே நிற இரத்தந்தான்னு எங்க மிஸ் சொல்லிருக்காங்கப்பா"

"சுகி சொன்னா புரிஞ்சிக்க மாட்ட?? அவன் இரத்தம் வேற; நம்ம இரத்தம் வேற.. அவன் உடம்புல ஓடுற இரத்தம்,சாக்கட மாதிரி.... எப்பவும் சாக்கடய சுத்தம் பண்ணுறதால, அவன் இரத்தமும் சாக்கட தான்...
இனிமே நீ அவன்கூட பேசக்கூடாது... அவனப்பத்தியும் பேசக்கூடாது... அவன்கிட்டயே போகக்கூடாது...
( www.praburathna.blogspot.com )


ஐந்து வயது சுகன்யாவுக்கு  எதுவும் புரியவில்லை; ஆனாலும் தலையாட்டினாள்.

அதுமுதல் சுந்தரத்தை பார்த்தாலே விலகிச்செல்ல ஆரம்பித்தாள். உண்மையில் அவளுக்கு சுந்தரத்தை பிடித்திருந்தது. ஆனாலும் அப்பாவுக்கு பயந்ததாலும்,"அவன் உடலில் ஓடுவது சாக்கடை" என்னும் அப்பாவின் பயமுறுத்தலாலும் சற்று விலகியே இருந்தாள்..

கிறிஸ்டோபர்க்கு மகள் தன் பேச்சை கேட்டதில் மிகுந்த பெருமிதம்…

எல்லாம் நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது, அந்த கோர விபத்துக்கு முன்புவரை..

விபத்தில் சுயநினைவை இழந்த கிறிஸ்டோபர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா்..
( www.praburathna.blogspot.com )


அங்கு அழுதுகொண்டே, தன் அத்தையுடன் சுகன்யா வந்தாள்...

அதற்கு முன்பே விஷயம் கேள்விப்பட்ட சுந்தரம் ஓடோடி வந்திருந்தான்...

அந்த மோசமான சூழ்நிலையிலும், சுந்தரத்தை கண்டவுடன் தன் முகத்தை திருப்பியபடி விலகிச்சென்று விட்டாள் சுகன்யா...

கிறிஸ்டோபர்க்கு உடனடியாக இரத்தம் தேவைப்பட்டது.

இரத்தம் கிடைக்க தாமதித்தபோது,சுந்தரம் முன்வந்து இரத்தம் கொடுத்தான்..

பார்த்துக்கொண்டேயிருந்தாள் சுகன்யா..

ஒரே நாளில் கிறிஸ்டோபர்க்கு நினைவு திரும்பியது...
கண் விழித்தவுடன் முதல்வேளையாக சுகன்யாவைப் பார்த்து கண்கலங்கியபடி அருகில் அழைத்தான்...

அந்த பிஞ்சுக்குழந்தை, தகப்பனின் அருகில் வராமல் முகம் சுழித்தபடியே ஓடியது...

அப்பாவுக்கருகில் வரவைக்க எல்லாரும் எடுத்த எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன....

பாவம்! கிறிஸ்டோபர்...தன் உடலில் ஓடும் சுந்தரின் இரத்தம் சாக்கடையல்ல என்று எப்படி தன் மகளுக்கு புரியவைப்பாரோ???!!
               
                                -----  K.Prabu Rathna

Tuesday, 3 November 2015

தம்பி நீ என்ன சாதி?

தம்பி நீ என்ன சாதி?
நான் மறவன்.
இயேசுவின் அன்பை ஒருபோதும் மறவன்.
நான் நாடான்.
உலக பொருளை நாடவே நாடான்.
நான் பறையன்.
இயேசுவின் புகழ் பறைசாற்றும் பறையன்.
நான் பள்ளன் .
இயேசுவுக்காக பள்ளு பாடுவதால் பள்ளன்.
நான் பிள்ளை.
இயேசுவின் செல்லப் பிள்ளை.
நான் கோனான்.
இயேசு என்னை ராஜாவாக்கியதால் கோ நான் .
நான் ஐயங்கார்.
கொஞ்சமும் ஐயமில்லாததால்
இயேசுவை அப்பா என்பதால் தேவர் மகன்.
திறப்பிலே நிற்பதில் முதலியன்.
நீங்க என்ன சாதி ணே??
ஙே!!!!

Monday, 25 May 2015

ஒரே நாமம்


ஒரே நாமம்

            நித்தியம் என்பது துவக்கமும் முடிவில்லாத ஒன்றாகும்.இந்த நித்தியத்திலிருந்து பிறந்ததுதான் ஆரம்பமும் முடிவுமுள்ள காலமாகும்;.இந்தக் காலம் என்னும் எல்லைக்குள் தான் மனுக்குல சரித்திரம் துவங்கி அது முடியும் தருவாயிலிருக்கிறது.மனுக்குலத்தை படைத்த தேவன் மனுதனோடு எப்பொழுதும் தொடர்பு கொள்ளுகிறவராயிக்கிறார்.அவ்விதமான தொடர்பின் அடிப்படையில் காலமானது,குற்றமற்ற காலம்,மனச்சாட்சியின் காலம்,நியாயப்பிரமாணத்தின் காலம்,கிருபையின் காலம்,நியாயத்தீர்ப்பின் காலம் என்கிற ஐந்து விதமான யுகங்களைக் கடந்து செல்லுகிறது.இவைகளில் முதல் 3 யுகங்கள் பழைய உடன்படிக்கையின் காலத்திற்குள்ளும் அடுத்த 2 யுகங்கள் புதிய உடன்படிக்கையின் காலத்திற்குள்ளும் அடங்குகின்றன.

             காலத்திற்கும் தேவனுடைய நாமத்திற்கும் சம்பந்தமுண்டு.தேவன் தமது மகத்துவமான நாமத்தை இக்காலம் என்னும் மனிதவரலாற்றில் தான் மனுக்குலத்திற்கு வெளிப்படுத்துகின்றார்.அந்தந்த காலத்தில் வாழும் தமது பிள்ளைகளுக்குத் தாம் தீர்மானித்த தம்முடைய நாமங்களில் ஒன்றினை அறிவித்து அதன் மூலமாகத் தம்முடைய தன்மையையும் திட்டத்தையும் தேவன் வெளிப்படுத்துகிறவராயிருக்கிறார்.தேவனுடைய உண்மையான பிள்ளைகள் தங்கள் காலத்தையும் தங்கள் காலத்திற்கென்று தேவன் வெளிப்படுத்திய நாமத்தையும் அறிந்துகொண்டு அந்த நாமத்திற்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளவேண்டும்.

     நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலம் கிருபையின் காலமாகும்.இதை புறஜாதிகளின் காலம் என்றும் சபையின் காலம் என்றும் கூட அழைக்கலாம்.இந்தக் காலத்திற்கென்று தேவன் கட்டளையிட்டதும் வெளிப்படுத்தியதுமான தேவநாமம் இன்னது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.இதை நாம் அறிவதற்கு முன்பாக பழைய உடன்படிக்கையின் காலங்களில் வெளிப்படுத்தப்பட்ட தேவ நாமங்களை குறித்து சற்று அறிந்து கொள்ளுவதும் நமக்கு நல்லது.வேதத்திலுள்ள பழைய ஏற்பாடு எபிரேய மொழியிலும் புதிய ஏற்பாடு கிரேக்க மொழியிலும் எழுதப்பட்;டன.அந்த மூல எபிரேய நாமங்களில் சிலவற்றை நாம் இங்கே குறிப்பிடுவது மிகவும் அவசியமாகும்.


  இயேலோகிம்:

                      வேதத்தின் முதல் வசனத்தில் நாம் வாசிக்கும் தேவனுடைய நாமம் இயேலோகிம் ஆகும்.இது ஆங்கிலத்தில் புழன என்றும்,தமிழில் தேவன் என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.இயேலோகிம் என்றால் “மகா பெலனுள்ளவர்” என்று பொருள்படும்.தேவனுடைய பெலம,மகத்துவம்,பராக்கிரமம்,ராஜரீகம் ஆகிய தன்மைகள் அனைத்தையும், இந்த நாமம் வெளிப்படுத்துகின்றபடியால் இது பன்மையில் வருகிறது.
           இப்படி பன்மையில்; வருகிறபடியால் சில குறுகிய நோக்குடையவர்கள் இது பல  தெய்வக் கொள்கைக்கு ஆதாரமானது என்று எண்ணுவதுண்டு,
எனினும் இயேலோகிம் என்;ற நாமம் பல தன்மைகளுடன் என்றும் விளங்கும் ஒன்றான மெய் தேவனை மட்டுமே குறிக்கிறது என்பதில் வேத ஆராய்ச்சியாளர்கள் ஒருமித்த கருத்துடையவர்களாயிருக்கிறார்கள்.இது தேவனுடைய தன்மைகளின் கூட்டுப் பெயர்.இது தேவனுடைய ஒரு பொதுவான பெயர்.இப்பெயரின் அறிமுகத்துடன் வேதம் ஆரம்பமாகிறது.




இயாவே




       வேதத்தின் இரண்டாவது அதிகாரத்திலேயே இந்த தேவனுடைய அதிமுக்கியமான நாமமாகிய “இயாவே”என்கிற நாமம் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இது ஆங்கிலத்தில் டுழசன என்றும் தமிழில் கர்த்தர் என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.இயாவே என்றால் இருக்கிறவராகவே இருக்கிறவர்(The Self Existing God) என்று பொருள்படும். ஆதாமின் காலத்திலிருந்தே மக்கள் இந்த நாமத்தை அறிந்து தொழுதுகொண்டு வந்த போதிலும்(ஆதி 4:26) மோசேயின் காலத்தில் தான் இந்நாமத்தின் பூரண அர்த்தம் தேவனால் வெளிப்படுத்தப்பட்டது(யாத்3:14,15). இது தேவனுடைய தனிப்பட்ட பெயராகும்.இத்தனிப்பட்ட நாமத்தினால் தான் இஸ்ரவேலர் தேவனை அறிந்திருந்தார்கள். இது வேதத்தில் சுமார் 7000 தடவை வருகிறது. உண்மையில் பழைய ஏற்பாட்டுக் காலத்திற்குட்பட்டவர்கள் அறிந்த ஒரே தேவனுடைய நாமம் இயாவே என்ற கர்த்தராகும்.



இயேகோவா:



         இந்த நாமம் பலராலும் தாராளமாக பயன்படுத்தப்பட்டு வந்த போதிலும் இது வேதத்தின் மூலத்தில் இல்லை. இது இஸ்ரவேலின் வேத குருக்களால் உருவாக்கப்பட்ட(Derived Name) நாமமாகும். என் நாமத்தை வீணிலே வழங்கவேண்டாம் என்ற கற்பனையினிமித்தம் அவர்கள் YAHWEH(இயாவே) என்ற நாமத்திலுள்ள A,E என்கிற இரண்டு உயிரெழுத்துக்களை மட்டும் நீக்கி விட்டு வாயால் உச்சரிக்க முடியாத YHWH என்கிற 4 எழுத்து நாமத்தை பயன்படுத்தினர். காலம் சென்ற பின்பு இதற்கு பதிலாக எஜமானன் என்னும் அர்த்தங்கொள்ளும் அதோனாய்(ADONAI) என்னும் எபிரேய நாமத்தைப் பயன்படுத்தினர்.சில காலம் சென்றபின்பு ADODAI என்னும் நாமத்திலுள்ள முதல் 3 உயிரெழுத்துக்களை YHWH என்ற நான்கெழுத்துக்குள் புகுத்தினர்.Y+A+H+O+W+A+H (YAHOWAH). இவ்விதமாக இயேகோவா என்கிற நாமம் வேதகுருக்களால் உருவாக்கப்பட்டு இன்று பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சில வேத மொழிபெயர்ப்புகளிலும்; இந்த நாமம் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.

இயேகோசுவா:



           புதிய உடன்படிக்கையின் காலத்திக்கென்று தேவன் கட்டளையிட்டதும் வெளிப்படுத்தியதுமாகிய நாமம் இயேகோசுவா என்பதாகும். இது ஆங்கிலத்தில் JESUS என்றும்
தமிழில் இயேசு என்றும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இயேசுவின் நாமம் இக்கிருபையின் காலத்தில் வாழும் தேவனுடைய பிள்ளைகளனைவருக்கும் மிகவும் இன்றியமையாத நாமமாகும். இது புதிய ஏற்பாட்டின் முதல் அதிகாலரத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
             இயேலோகிம் ,இயாவே என்ற இரு பிரதான நாமங்களின் வெளிப்பாட்டுடன் பழைய ஏற்பாட்டின் காலம் முடிவு பெற்றது.புதிய ஏற்பாட்டின் காலம் துவங்குவதற்கு முன்பாகவே இ;க்காலத்திற்குரிய நாமம் பரலோகத்தில் ஆயத்தமானது. இந்த நாமத்தை எடுத்துக் கொண்டு தேவதூதன் பூலோகத்திலுள்ள மரியாளிடத்திற்கும், யோசேப்பினிடத்திற்கும் அனுப்பப்பட்டான்.
             தூதன் கன்னியாகிய மரியாளை நோக்கி : நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக என்றான். பின்பு தூதன் அவளுக்கு நியமிக்கிப்பட்ட யோசேப்பை நோக்கி: அவள் ஒரு குமாரனைப் பெறுவாள்,அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக என்றான்.அப்படியே அக்குழந்தை பிறந்தபோது அதன் எட்டாவது நாளில் அதற்கு இயேசு என்று பேரிட்டடார்கள்(லூக்1:31,மத்1:21,லூக் 2:21).
             அந்த நாமமே புதிய உடன்படிக்கையின் காலத்தில் உட்பட்டவர்களுக்கு மீட்பின் நாமமாக தேவன் கட்டளையிட்டார். இந்த இயேசு என்ற நாமத்தின் அர்த்தமென்ன? அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்று வேதம் கூறுகிறது(மத் 1:21).
             இயேசு என்ற தமிழ்ப் பதத்திற்கு எபிரேயத்தில் இயேகோசுவா என்பதாகும். இயேகோசுவா என்றால் இயாவே சுவா ஆனார் என்று அர்த்தம். அதாவது கர்த்தர் இரட்சகரானார் என்று பொருள்படும். இயேசு என்கிற இப்புதிய உடன்படிக்கையின் நாமம் கர்த்தர் இரட்சகரானார் எனப் பொருள்படும். இயாவே இயேகோசுவாவானார்.
             காலத்தின் எல்லைக்குள்ளே தேவன் தம்முடைய இரு அதிமுக்கிய தன்மைகளாகிய 1.கர்த்தர் 2.இரட்சகர் என்ற அதிமுக்கிய தன்மைகளில் மட்டுமே மனுக்குலத்திற்குத் தம்மை வெளிப்படுத்துகிறார். நான் நானே கர்த்தர்,என்னையல்லாமல் இரட்சகர் இல்லை,கர்த்தாவே நீர் எங்கள் பிதாவும் எங்கள் மீட்பருமாயிருக்கிறீர்,இது பூர்வமுதல் உம்முடைய நாமம், என்று வேதம் கூறுகிறது(ஏசாயா 43:11  63:16).மேலும் கர்த்தர்:இப்போதும் யாக்கோபே உன்னை சிருஷ்டித்தவரும் இஸ்ரவேலே உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறவதாவது: பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன் என்கிறார்(ஏசா 43:1)சிருஷ்டிகர் உருவாக்குகிறவர் என்கிற நிலையிலுள்ள கர்த்தரே மீட்கிற இரட்சகராகவுமிருக்கிறார் என்பதை இவ்வசனங்கள் மிகவும் தெளிவாக்குகின்றன. பழைய ஏற்பாட்டின் சிருஷ்டிகர் புதிய ஏற்பாட்டின் இரட்சகராக வெளிப்பட்டபோது தான் அவருக்கு இயேசு என்னும் நாமம்; தரிக்கப்படுகிறது. தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார்.
               ஆதியிலிருந்;ததும் தேவனிடத்திலிருந்ததும் தேவனாகவேயிருந்ததுமாகிய வார்த்தையானது மாம்சமாகி இப்பூமியில் மனிதனானார். காணக்கூடாத அரூபியானதும், அதரிசனமாகியதுமாகிய தேவன் மனித ரூபமானாகக் காணப்பட்டார். ஆவியாயிருக்கும் நிலையில் சகலவற்றையும் சிருஷ்டித்த இயேலோகிம் என்ற தேவன் மனித ரூபத்தில் வெளிப்பட்ட நிலையில் இயேசு என்னும் நம்முடைய இரட்சகரானார்.இவரே முந்தினவரும் இவரே பிந்தினவருமாயிருக்கிறார். இவரே சிருஷ்டிகரும் இரட்சகருமாயிருக்கிறார்.இவரே கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிறார்.
           இதினிமித்தமே பெத்லகேமிலே இயேசு பாலகனாய்ப் பிறந்தபோது  அவருடைய பிறப்பின் செய்தியை மேய்ப்பர்களுக்கு அறிவித்த கர்த்தருடைய தூதன்: இன்று கர்;த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்கு தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார் என்றான் (லூக் 2:11)
            அவர் கர்த்தர், அவர் இரட்சகர், இந்த இரு தேவ தன்மைகளையும் தன்னுள் கொண்ட நாமம் தான் இயேசு என்னும் நாமம். கர்த்தரானவர் இரட்சகரானார் என்ற மகா உன்னதமான தேவ சத்தியத்தை வெளிப்படுத்தும் நாமம் இயேசுவாகும்.
            மேலும் இதை விளக்க புதிய ஏற்பாட்டில் இரண்டு முக்கியமான வசனங்களை நாம் குறிப்பிட வேண்டும்.




இயேசுவே கர்த்தர்:



                 இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக  இயேசுகிறிஸ்து கர்த்தர் என்று நாவுகள் யாவும்; அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்கு தந்தருளினார்.( பிலி 2:10,11)
                  காணக்கூடாத தேவன் காணக்கூடிய மனிதனாக அவதாரம் எடுத்து வந்த போது அந்த அவதாரப்புருஷனுக்கு இயேசு என்கிற பெயர் கொடுக்கப்பட்;டது. இந்த நாமத்தினால் வானோர், பூதலத்தோர் ,பூமியின் கீழானோர் அனைவருடைய முழங்கால்களும் முடங்க வேண்டும். அவர்களுடைய நாவுகள் யாவும் இயேசுகிறிஸ்துவை கர்த்தர் என்று அறிக்கைசெய்ய வேண்டும். இம்மூவுலகோரையும் படைத்தவரே இயேசு கிறிஸ்துவாக வெளிப்பட்டார் என்பதை இவர்கள் அறிந்து அவரைக் கர்த்தர் என்று வணங்கி அறிக்கையிட வேண்டும். முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் தேவனை அறிக்கைபண்ணும் என்று கர்த்தர் சொல்கிறார். (ரோ 14:11)
                  இயேசுகிறிஸ்துவே கர்த்தரென்று சிருஷ்டிகள் யாவும் அவரை அறிந்து வணங்கி அறிக்கை செய்வதினிமித்தம் இந்த இயேசுவின் நாமம் எல்லா நாமத்திற்கும் மேலான நாமமாயிருக்கிறது. இதற்குச் சமமாக ஒரு நாமமுமில்லை. எல்லா துரைத்தனத்திற்கும், அதிகாரத்திற்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்திற்கும் இம்மையில் மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்திற்கும் மேலாய் இயேசுவானவர் உயர்ந்திருக்கிறார் என வேதம் சொல்கிறது. இவ்விதமாக உயர்த்தப்பட்ட இயேசுகிறிஸ்து மாம்சத்தில் வந்ததை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல.
                  அந்திக்கிறிஸ்துவின் ஆவி அதுவே (1யோ4:3). ஒருவன் இந்த இயேசுகிறிஸ்துவைக் கர்த்தரென்று அறிக்கை செய்ய வேண்டுமானால் அவன் பரிசுத்த ஆவியின் மூலமாக மட்டுமே அப்படி செய்ய முடியும் என்று வேதம் கூறுகிறது. (1 கொரி 12:3)  . இயேசுவே கர்த்தர்!




இயேசுவே இரட்சகர்:

                           அவராலேயன்றி (இயேசுவாலேயன்றி) வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை. நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் மனிதர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படப்படவுமில்லை. (அப் 4:12)
                  சிருஷ்டிகள் யாவும் அவரை வணங்கி அவரே கர்த்தர் என்று அறிக்கைப்பண்ணும்படிக்கு அவருக்கு இயேசு என்னும் எல்லா நாமத்திற்கும்; மேலான நாமம் தந்தருளப்பட்டது. அதிலும் வானத்தின் கீழெங்குமுள்ள மனிதர்களுக்கு மட்டும் இரட்சிப்பை அருளும்படிக்கு இயேசு என்னும் ஒரே நாமம் கட்டளையிடப்பட்டது. தேவதூதர்கள் பாவஞ்செய்த போது தேவன் அவர்களைத் தப்ப விடவில்லை. ஆயினும் மனுக்குலம் பாவத்தில் விழுந்தபோது , அவர்களை அவர் இரட்சிக்க மனித ரூபம் எடுத்து வந்தார்.
                  பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்திற்கு வந்தார். பாவிகளை இரட்சிக்கும் நாமம் அவருக்கு சூட்டப்பட்டது. அந்த இயேசுவின் நாமத்தை விசுவாசித்து அவரை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். எம்மதத்தினவராயினும் எக்குலத்திவராயினும், எக்காலத்தவராயினும் இந்த இயேசுவின் நாமத்தினால் மட்டுமே அவர்களுக்கு இரட்சிப்பு உண்டு. இந்த இயேசு கர்த்தர்களில் ஒருவரல்ல. இவர் ஒருவரே கர்த்தர். இவர் இரட்சகர்களில் ஒருவரல்ல. இவர் ஒருவரே இரட்சகர். இவராலேயன்றி வேறு ஒருவராலும் இரட்சிப்பு இல்லை. இவர் நாமம் ஒன்றே பாவங்களை நீக்கி நம்மை இரட்சிக்கும். இயேசுவே இரட்சகர்!


நானே அவர்:



                  மாம்சத்தில் வெளிப்பட்ட இந்த இயேசு யார்? அவருடைய நாமம் யாருடையது? இதைக்குறித்து அவரே சொன்ன சில வசனங்களை நாம் நினைவுகூறுவோம். நான் என் பிதாவின் நாமத்தினாலே கிரியை செய்கிறேன் என்று இயேசு சொன்னார்(யோ 5:43, 10:25). இயேசு தமது சுய நாமத்தினால் வராமல் தம்மை அனுப்பினவருடைய நாமத்தினாலே வந்தார். அந்த தேவ நாமம் இயேசுவே. மேலும் அவர் பிதாவே உம்முடைய நாமத்தை அவர்களுக்கு தெரியப்படுத்தினேன். உம்முடைய நாமத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தினேன் என்றார்(யோ 17: 26,6) சீடர்கள் தெரிந்து கொண்ட நாமம் இயேசு. அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட நாமம் இயேசு.
                  அவர் வந்ததும், கிரியை செய்ததும்;, தெரியப்படுத்தியதும், வெளிப்படுத்தியதுமாகிய நாமம் இயேசுவே. இதுவே நித்தியமானவரும், சத்தியமானவருமாகிய தேவனுடைய நாமமாகும். இதினிமித்தமே இயேசுவானவர் நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம், என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான், நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள், என்றார் (யோ 8:24)
                  இக்காலத்தில் வாழும் நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரே தேவனுடைய ஒரே நாமம் இயேசுவாகும். இயேசுகிறிஸ்துவே மெய்யான தேவனும், நித்திய ஜீவனுமாயிருக்கிறார். இவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன் , என வேதம் கூறுகிறது ( 1யோ 5:20  ரோ 9:5)

நன்மைகள் தரும்:

                   பரலோத்தின் தேவனுடைய நன்மைகள் பூலோகத்திலுள்ள மனுமக்களுக்குக் கிடைப்பது இந்த இயேசுவின் நாமத்தினாலேயே. இந்த நாமத்தை அறிந்து ஏற்றுக்கொண்டவர்கள் இந்த நாமத்தினாலேயே சகல நன்மைகளையும் பெற்றுக்கொள்வார்கள். இந்த இயேசுவின் நாமத்தினால் நமக்கு கிடைக்கும் நன்மைகளில் சிலவற்றை நாம் இங்கே குறிப்பிடுகிறோம்.
1.இரட்சிப்பு – அப் 4:12  மத் 1:21  ரோ 10:13
2.மன்னிப்பு – அப் 10:43 கொலோ 1:14
3.சுத்திகரிப்பு – 1கொரி 6:11
4.பரிசுத்த ஆவி – யோவா 14:26 அப் 2:38
5.நித்திய ஜீவன் - யோ 20:31
6.நீதிமானாகுதல் - 1கொரி 6:11
7.தேவபிள்ளையாகுதல் - யோ1:12
8.தேவபிரசன்னம் - மத் 18:20
9.ஜெபத்திற்கு பதில் - யோ 14:13,14  16:24
10.சரீர சுகம் - அப் 3:16  4:10  யாக் 5:14,15
            இந்த நன்மைகளும் இன்னும் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள மற்ற நன்மைகளும் இந்த இயேசுவின் நாமத்தினால் மட்;டுமே நமக்கு கிடைக்கும். தேவ நன்மைகள் நம்; வாழ்க்கையில் வந்து நிரம்ப இயேசுவின் நாமத்தைத் தவிர வேறே நாமமில்லை.



நம் செய்கைகள்;:



           இந்த இயேசுவின் நாமத்தை அறிந்து அவருடைய பிள்ளைகளகிய நாம் இந்த நாமத்தைக் கொண்N;ட இப்பூலோக வாழ்க்கையில் செயல்படவேண்டும் என்று வேதம் போதிக்கிறது. வார்த்தையினாலாவது, கிரியையினாலாவது நீங்கள்  எதைச் செய்தாலும் அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து அவர் முன்னிலையாக பிதாவாகிய தேவனை ஸ்தோத்தரியுங்கள் (கொலோ 3:17). தேவனுடைய சிருஷ்டிகளில் தேவன் போல் செயல்படக்கூடிய ஒரே சிருஷ்டி மனிதன்; மாத்திரமே. நாம் வார்த்தையைக் கொண்டும் செயல்பட முடியும், கிரியையைக் கொண்டும் செயல்பட முடியும்.
            இவை யாவையும் நாம் இயேசுவின் நாமத்தினால் மட்டுமே செயல்படுத்த வேண்டும்.
            அப்படி நாம் செய்யவேண்டிய சில காரியங்களை இங்கே குறிப்பிடுவோம்.
1.விசுவாசி – யோ1:12  2:23  ரோ 1:7
2.தரித்துக் கொள் - அப் 15:14-16  2:38
3.ஒன்று கூடு – மத் 18:20
4.தொழுது கொள் - அப் 9:14  1கொரி 1:2
5.ஞானஸ்நானம் பெறு – மத் 28:19  அப் 2:38  8:15  10:48  19:5
6.ஜெபி – யோவா14:13,14  16:24
            7.துதி – எபே 5:20 எபி 13:1
     8.பிரசங்கி – லூக் 24:47  அப் 5:40-42
     9.பிசாசுகளைத் துரத்து – மாற் 16:17  லூக் 10:17
     10.பாடுபடு – மத் 10:22   அப் 5:41  1பேதுரு 4:14
            சுகல சிருஷ்டிகளும் வணங்கும்படிக்குத் தந்தருளப்பட்ட ஒரே நாமம் இயேசு. மனுக்குலம் இரட்சிக்கப்படும்படி கட்டளையிடப்பட்ட ஒரே நாமம் இயேசு. இப்புதிய உடன்படிக்கையின் காலத்திலுள்ள தேவனுடைய பிள்ளைகளுக்கு வெளிப்படுத்தப்பட்ட ஒரே நாமம் இயேசு. தேவனுடைய வாக்குத்தத்தத்தின் நன்மைகளை நமக்கு கிடைக்கச்செய்யும் ஒரே நாமம் இயேசு. தேவனுடைய பிள்ளைகள் எதைச்செய்தாலும் அவர்கள் பயன்படுத்தவேண்டிய ஒரே நாமம் இயேசு. இயேசுவின் நாமத்தை தவிர வேறே நாமமில்லை.
                  இந்த இயேசுவின் நாமத்தை அறிந்துகொள்ளுவோம், தரித்துக்கொள்ளுவோம், தொழுதுகொள்ளுவோம், எங்கும் பிரஸ்தாபிப்போம். வாழ்க இயேசுவின் நாமம்! வளர்க அந்நாமத்தின் பிரஸ்தாபம்!
                                                                                  -    ஆக்கியோன் சகோ.ஆர்தர் டேவிஸ்

Wednesday, 20 May 2015

அந்த 21 பேர்

திடகாத்திரமானவர்கள்!
தீவிரமானவர்கள்!
அவர்கள் வாலிபர்!
உடல் வாகைப் பார்த்தால் செல்வந்தர்!

ஆனாலும் அந்தோ பரிதாபம்!!


கல்வியிலும் பல கலைகளிலும் தேர்ந்தவர்கள்!
கொள்கைப் பிடிப்பு மிக்கவர்கள்!
உயிருக்கு அஞ்சாதவர்கள்!
தாமதம் அறியாதவர்கள்!

ஆனாலும் அந்தோ பரிதாபம்!!



கண்களில் பயமில்லை!
கைகளில் நடுக்கமில்லை!
சிந்தையில் குழப்பமில்லை!
செயலில் தயக்கமில்லை!

ஆனாலும் அந்தோ பரிதாபம்!!


சீராக சீருடை அணிந்திருந்தனர்!
வேகமாக நடந்து வந்தனர்!
தங்களுக்குள் பேசிக் கொண்டனர்!
இறுதியாக முழக்கமிட்டனர்!

ஆனாலும் அந்தோ பரிதாபம்!!



அவர்கள் முடிவு அறிகையில் நெஞ்சம் கனத்தது,
இதயம் துடித்தது, மனது வலித்தது

ஆம் அவர்களின் முடிவு சோகமானது, கோரமானது

அந்த 21 பேர் அந்த 21 பேர்,
அவர்கள் கிறிஸ்தவர்களை கொன்ற தீவிரவாதிகள்.





அவர்களா பாவம்? பின்னே செத்தவர்களா பாவம்?

Tuesday, 5 May 2015

காதலிக்கலாமா பிரதர்? - பகுதி 4 Kaathalikalaamaa Brother? Part -4

காதலிக்கலாமா பிரதர்

                              முந்தைய பதிவுகளைப் படித்து விட்டு தொடரவும்,,, நன்றி
                 
   இயேசுவை காதலிக்கலாமா? அநேக கிறிஸ்தவர்களுக்கு ஏற்படும் சந்தேகம் இது.   
                     காதல் என்பதன் உண்மையான அர்த்தத்தை நாம் உணர்ந்து கொண்டால் இத்தகைய கேள்வி நமக்குள் எழாது.
                    காதல் என்பது அன்பு பறிமாற்றத்தின் முக்கிய வகை. நான் ஏற்கனவே சொன்னபடி காதல் யாருக்கும் எதன் மீதும் வரலாம்(உதாரணம்: இசைக்காதல்,கவிக்காதல்,தமிழ்க்காதல்). ஆனால் நாம்;(இன்றைய இளைஞர்கள்) காதல் என்பதை எவ்வகையில் புரிந்து வைத்திருக்கிறோமோ அதற்கேற்றபடி உங்களுக்கு விளக்கிக் கொண்டிருக்கிறேன். நாம் என்ன புரிந்து வைத்திருக்கிறோம்? ஒரு ஆணைப்பார்த்து பெண்ணுக்கோ அல்லது ஒரு பெண்ணைப் பார்த்து ஆணுக்கோ ஏற்படும் பருவ ஈர்ப்பை காதல் என வரையறுக்கிறோம். காதல் இந்த வரையறையை மீறியது.  

Tuesday, 28 April 2015

பூகம்பம்! பயங்கரம்!!

                                                         
 இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் (25,26.04.2015) ஏற்பட்ட பூகம்பம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 1934ம் ஆண்டு ஒருமுறை நேபாளத்தில் வந்த பூகம்பம் சுமார் 10,600 பேரை காவு கொண்டது. அதன் பிறகு மிகப் பெரிய தேசிய அழிவாக இந்த பூகம்பம் பார்க்கப்படுகிறது. தலைநகரான காத்மண்டுவை முற்றிலுமாக சீர்குலைத்த இந்த பூகம்பம் சுற்றியுள்ள கிராமங்களையும் விட்டுவைக்கவில்லை. இதுவரை வந்த தகவல்களின் படி(29.04.2015) சுமார் 4,500 பேர் பலியானது அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது. 10,000த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர்

Monday, 27 April 2015

காதலிக்கலாமா பிரதர்? - பகுதி 3 Kaathalikalaamaa Brother? Part -3

கிறிஸ்தவர்கள் காதலிக்கலாமா என்னும் மிகப் பெரிய கேள்விக்கான பதிலை ஆராய்ந்து  கொண்டிருக்கிறோம்
கட்டாயமாக முந்தைய பதிவுகளை படித்து விட்டு படிக்கவும். நன்றி.
  காதலிக்கலாமா பிரதர்? - பகுதி 1
  காதலிக்கலாமா பிரதர்? - பகுதி 2
காதலிக்கலாமா பிரதர்? - பகுதி 4
காதல் என்றால் என்ன? என்றும் ஏன் காதலிக்கக்கூடாது? என்றும் காதல் வருவதற்கான பல்வேறு காரணங்களையும் பார்த்தோம். இனி இந்த பதிவில் இன்னும் இவைகளைப்பற்றிப் பேசுவோம்.

வேதம் தெளிவாக காதலை எதிர்க்கிறது. இன்று உலகம் முழுவதும் காதலின் அடையாளமாக ஒரு அம்பு இதயத்தைப் பிளப்பது போன்ற படத்தை காண்பிக்கிறார்கள். ஆனால் வேதத்தில் இதைப்பற்றி முன்பே குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு குருவி தன் பிராணணை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழத்தீவிரிக்கிறதுபோலும், அவளுக்குப் பின்னே போனான்@ அம்பு அவன் ஈரலைப் பிளந்தது.(நீதி 7:23)
       இதயத்தை பிளக்கும் அம்பு வேண்டாம்,இதயங்களை பிணைக்கும் அன்பே வேண்டும்!

Monday, 20 April 2015

காதலிக்கலாமா பிரதர்? - பகுதி 2 Kaathalikalaamaa Brother? Part -2

 
காதலிப்பது வேதத்தின் அடிப்படையில் சரியான செயலல்ல என்பதை கடந்த பதிவில் நாம் பார்த்தோம். 
  முந்தைய பதிவை பார்க்க இதை   கிளிக்       செய்யவும்     .
நாகரீகமான நல்ல அனுபவமுள்ள மனிதர்களே காதலை எதிர்க்கும்பொழுது தேவன் அதை அங்கீகரிக்கவா செய்வார்?  வாலிப வயதில் காதலில் மூழ்கி முத்தெடுத்தவர்கள் கூட பிற்காலத்தில் அது வெறும் மாயை என்று ஒத்துக்கொள்கிறார்கள்!வாலிப வயதில் எல்லோருக்குமே காதல் உணர்வு இருக்கும். அது இயற்கையாய் தேவன் கொடுத்தது. ஆனால் அதிலே நாம் சிக்கிக் கொள்ளக்கூடாது.ஒருமுறை ஒரு வாலிபன் தேவனிடம் ஜெபித்தானாம்,“ஆண்டவரே உம் சித்ததின்படியான மணமகளை எனக்குத்; தாரும்.ஆனால் உம் சித்தம் எதிர்த்த வீட்டு எஸ்தராக இருக்கட்டும்”என்று. தேவனிடம் போய் அந்த பெண் (அ) ஆண் என்னை நேசிக்க உதவி செய்யும் என்று சொல்வதை விட தேவனே நான் உம்மை நேசிக்கிறேன் என்பது அவரை எவ்வளவு பிரியப்படுத்தும்! 

Monday, 13 April 2015

காதலிக்கலாமா பிரதர்? Kaathalikalaamaa Brother?

                 

    வாலிபர்களிடத்திலே என்ன கேள்வியென்றாலும் மனம் விட்டுக் கேளுங்கள் என்றவுடன் அவர்கள் இரகசியமாக வந்து காதை கடிப்பது காதலிக்கலாமா பிரதர் என்பதாகத் தான் இருக்கிறது. அநேக கிறிஸ்தவ வாலிபர்களுக்கு காதலிப்பது சரியா?தவறா? என்பதில் மிகப்பெரிய குழப்பம் இருக்கிறது. சில வாலிபர்கள் உன்னைப்போல பிறனை நேசி என்னும் வசனத்தை தவறாகப் புரிந்து கொண்டு பார்க்கிற பேசுகிற பெண்களையெல்;லாம் நேசிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். காதலித்தால் எதிர்காலம் பாழாகும் என்றால் காதலித்து திருமணம் செய்தவர்கள் வாழ்க்கை நன்றாகத் தானே இருக்கிறது என்கிறார்கள் மேவாயைத் தேய்த்துக் கொண்டே. காதலி;த்து திருமணம் செய்து கொண்ட சிலரின் வாழ்வும் முன்னுதாரணம் சொல்ல இவர்களுக்கு தோதாகிறது. ஆனால் உண்மையில் காதலித்து திருமணம் செய்து கொள்கிறவர்கள் எல்லாரும் மகிழ்ச்சியாகத் தான் வாழ்;கிறார்களா? காதல் செய்வது சரிதானா? காதலிக்கக்கூடாதென்று வேதத்தில் எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா? வேதாகமத்தில் யார் யாரெல்லாம் காதலித்தார்கள்? காதல் வருவதற்கான காரணம் என்ன?அதை மேற்கொள்ளும் வழி என்ன? இது போன்ற காதலைக்குறித்த கருத்துக்களை வேதாகமம் துணைகொண்டு  தெளிவுபடுத்துவது தான் இப்பதிவின் நோக்கமாகும்.தொடர்ந்து வாசியுங்கள் தேவன் தாமே உங்களோடு இடைபடுவாராக…

Monday, 23 March 2015

சகோதரனிடமிருந்து சகோதரிக்கு

சுடிதாரின் பின்னால் முடிச்சு வைப்பதேனம்மா?
நீ கட்டவா? பிறர் அவிழ்க்கவா?

சட்டையில் சன்னல் எதற்கம்மா?
காத்துப் போகவா? பிறர் பார்த்துப் போகவா?

காற்றில்லாமல் வாழலாம்

            

காற்றில்லாமல் வாழலாம் உம் பாசம் என்னும் சுவாசத்தால்

தண்ணீரில்லாமல் வாழலாம் நீர் ஜீவ ஊற்றாய் இருப்பதால்

கிறிஸ்துமஸ் கவிதை

கிறிஸ்துமஸ்  கவிதை

(நண்பன் அமல்ராஜ் அனுப்பியது)


உலகாள நீ வருவாய் என்று
உலகமே காத்திருக்க
ஊழியனாய் நீ வந்தாய்
உலகத்தாரை வாழவைக்க