“நானும் வேதமும்”(ஞானஸ்நானம்)
(வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது 2தீமோ 3:16)
நான்: ஓ என் வேதமே! பரலோக இராஜ்யம் வர நான் என்ன செய்ய வேண்டும்?
வேதம்: இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறாவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.(யோவா 3:5)
நான்: தாயின் வயிற்றிலிருந்து பிறப்பதுதானே ஜலத்தினால் பிறப்பது ?
வேதம்: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். (யோவா 3:3)நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்கவந்தேன் என்றான்.(யோவா 1:31)
நான்: அப்படியானால் ஜலத்தினால் பிறப்பதென்பது தாயின் வயிற்றிலிருந்து பிறந்தபின் நடைபெறும் நிகழ்வா?
வேதம்: யோவான் எல்லாருக்கும் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன் (லூக் 3:16)
நான்: நான் ஏன் ஞானஸ்நானம் பெற வேண்டும்?
வேதம்: யோவான் வனாந்தரத்தில் ஞானஸ்நானங்கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கம்பண்ணிக்கொண்டிருந்தான்.(மாற் 1:4)அப்பொழுது ய+தேயா தேசத்தார் அனவைரும் எருசலேம் நகரத்தார் யாவரும், அவனிடத்திற்குப்போய், தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.(மாற் 1:5)
நான்: நான் தான் எந்த பாவமும் செய்யவில்லையே?
வேதம்: ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?(யோபு 25:4)நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.(1யோவா 1:8)
நான்: ஓ! நான் எப்போது ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்?
வேதம்: பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.(அப் 2:38)
நான்: அப்படியானால் மனந்திரும்பாமல் ஞானஸ்நானம் எடுத்தால் வீண்தானா?
வேதம்: தங்களுடைய கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி,(வெளி 2:22) அநேகர் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வருகிறதை அவன் கண்டு: விரியன் பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்?மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள். (மத் 3:7,8)
நான்: சிறுவயதில் எனக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்கள்.அப்போது நான் மனந்திரும்பவேயில்லையே?
வேதம்: மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான்.(அப் 19:4) மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்து யோவான் இஸ்ரவேலர் யாவருக்கும் பிரசங்கித்தான்.(அப் 13:24) யோவான் வனாந்தரத்தில் ஞானஸ்நானங்கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கம்பண்ணிக்கொண்டிருந்தான்.(மாற் 1:4)
நான்: அப்படியானால் எனக்கு சிறுவயதில் கொடுத்த ஞானஸ்நானம் செல்லாதா?
வேதம்: ஒருவன் மல்யுத்தம்பண்ணினாலும், சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான்.(2தீமோ 2:5)
நான்: சரி.இன்னொரு கேள்வி.ஞானஸ்நானம் எடுத்தபோது என் தலையில் தண்ணீரைத் தெளித்தார்கள்.இது சரிதானே?
வேதம்: மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.(ரோம 6:4)
நான்: ஞானஸ்நானம்……அடக்கம்………..ஒன்றும் புரியவில்லையே? ஓ! இப்போது புரிகிறது. அடக்கம் பண்ணுவதற்கு ஒப்பனையாக நீரில் மூழ்க வேண்டுமோ?ஆனால் உன்னில் இதற்கு உதாரணம் இருக்கிறதா?
வேதம்: யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள். (மத் 3:6) இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே,(மத் 3:16) தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்.(மாற் 1:5) நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்.(மாற் 1:9) அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான்@ ஜனங்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள்.(யோவா 3:23) இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி, (அப் 10:47)
நான்: ஆமாம் அதானே! தலையில் தெளிப்பதற்கு எதற்கு நதிகளுக்கும்,தண்ணீர் மிகுதியாயிருக்கும் இடங்களுக்கும் செல்லவேண்டும்?
வேதம்: அவர்கள் வழிநடந்துபோகையில், தண்ணீருள்ள ஓரிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி: இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன என்றான்.(அப் 8:36) அப்பொழுது பிலிப்பும் மந்திரியும் ஆகிய இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள்@ பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானங்கொடுத்தான்.(அப் 8:38)
நான்: தலையில் தெளிப்பதற்கு தான் சொம்பு தண்ணீர் போதுமே! எதற்கு தண்ணீரில் இறங்கினார்கள்?அப்படியானால் முழுவதுமாக கழுவப்படுவது தான்; ஞானஸ்நானமா?
வேதம்: ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான்.(அப் 22:16)
நான்: சரி சரி.ஞானஸ்நானம் எந்த நாமத்தில் எடுக்க வேண்டும்?
வேதம்: பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.(அப் 2:38)
நான்: என்னது இயேசுவின் நாமத்திலேயா?? ஐயோ டா! நான் கேட்கிற எல்லா கேள்விக்கும் நீ முரண்பாடாகவே பதில் சொல்கிறாயே!பெரும்பாலானோர் பிதா,குமாரன்,பரிசுத்த ஆவியின் நாமத்திலே தானே கொடுக்கிறாhகள்?நீ சொல்லும் காரியம் உலக நடைமுறைக்கு அந்நியமாக அல்லவா இருக்கிறது?
வேதம்: என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்@ அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்.(ஓசி 8:12)
நான்: ஓஹோ! உலகம் தான் உன்னை அந்நியமாக எண்ணுகிறதா?ஆனால் மத் 28:19ல்ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, (மத் 28:19) என்று நீ தானே சொல்கிறாய்.அதைத் தானே மக்கள் செய்கிறார்கள்?
வேதம்: ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, (மத் 28:19)
நான்: என்ன நீயும் அதையே கூறுகிறாயே? ஆமாம் இப்போது தான் கவனித்தேன்.நாமத்திலே என்று தானே இருக்கிறது. மூன்று பேரென்றால் நாமங்களில் என்றல்லவா இருந்திருக்க வேண்டும்?
வேதம்: ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, (மத் 28:19)
நான்: மீண்டுமா? ஆனால் இம்முறை இன்னுமோர் விஷயத்தை கவனிக்கிறேன்.பிதா என்பது தன்மை தான் நாமமல்ல.குமாரனும்,பரிசுத்த ஆவியும் கூட நாமமல்ல தன்மை தான்.ஆனால் நாமத்தில் என்றல்லவா இருக்கிறது? பிதாவின் நாமம் என்ன?
வேதம்: நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுயநாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள்.(யோவா 5:43)இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை@ என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற கிரியைகளே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது.(யோவா 10:25)
நான்: ஓ இதைச் சொன்னவர் இயேசு.அப்படியானால் பிதாவின் நாமம் இயேசு.எனில் குமாரனின் நாமம்?
வேதம்: அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக@ ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.(மத் 1:21)
நான்:சரி. ஆவியின் நாமம்?
வேதம்: என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்ப+ட்டுவார்.(யோவா 14:26) அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.(மத் 1:18)
நான்: சரி பிதா,குமாரன்,பரிசுத்த ஆவியின் நாமம் இயேசு தான் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்ததாக வரலாறு இருக்கிறதா?
வேதம்: பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள்(அப் 2:38,41) இவர்கள் வந்தபொழுது அவர்களில் ஒருவனும் பரிசுத்தஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தைமாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு,(அப் 8:15) கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான்(அப் 10:48) அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்.(அப் 19:5) கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா? (ரோம 6:3) ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே.(கலா 3:27)
நான்: அடேயப்பா!!இத்தனை உதாரணங்களா??சரி பிதா,குமாரன்,பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானம் எங்கேயாவது கொடுக்கப்பட்டிருக்கிறதா?
வேதம்: பதினொரு சீஷர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள் அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,(மத் 28:16,18,19) பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்னசெய்யவேண்டும் என்றார்கள்,பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.(அப் 2:37,38)
நான்: அட ஆமா.இப்போது தான் கவனிக்கிறேன்.இயேசு யாரிடம் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானங்கொடுக்கச் சொன்னாரோ அந்த சீஷர்களே இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்திருக்கிறார்கள்.பிறகெப்படி பிதா,குமாரன்,பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டிருக்கும்?
நான்: இப்போது எனக்கு இன்னுமோர் சந்தேகம்?ஒரு வேளை சீஷர்கள் தவறு செய்திருப்பார்களோ?இயேசுவின் கட்டளையை மீறியிருப்பார்களோ?
வேதம்: இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார்.அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென்.(மாற் 16:19,20) பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்ப+ட்டுவார்.(யோவா 14:26) அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வௌ;வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள் பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்.(அப் 2:4,38)
நான்:ஆமாம் தேவன் தாம் அவர்கள் சொன்ன வசனத்தை உறுதிப்படுத்தியிருக்கிறார்.அவர்களும் சுயமாய் சொல்லவில்லை.ஆவியானவரே அவர்கள் மூலமாய் பேசியிருக்கிறார்.ஆனால் நாங்கள் இயேசு சொன்னதைச் செய்ய வேண்டுமா? அல்லது சீஷர்கள் சொன்னதை செய்யவேண்டுமா?
வேதம்: சீஷரை நோக்கி: உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான், உங்களை அசட்டைபண்ணுகிறவன் என்னை அசட்டைபண்ணுகிறான், என்னை அசட்டைபண்ணுகிறவன் என்னை அனுப்பினவரை அசட்டைபண்ணுகிறான் என்றார்.(லூக் 10:16)
நான்:அப்படியானால் இயேசுவால் ஏற்படுத்தப்பட்ட சீஷர்களுக்கு நாங்கள் கீழ்ப்படிய வேண்டும் தான்.சீஷர்களும் மனிதர்கள் தானே?அவர்களுக்கெப்படி இ;ந்த இரகசியங்களெல்லாம் தெரியும்?
வேதம்:அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது@ புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.(மாற் 4:11)அவர் பாடுபாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்.(அப் 1:3)
நான்: அதெல்லாம் சரிதான் இயேசுவின் நாமத்தில் தான் ஞானஸ்நானம் எடுக்கவேண்டுமென்ற கட்டாயம் இருக்கிறதா என்ன?
வேதம்: அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.(லூக் 24:47) அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.(யோவா 20:31)
நான்: அவருடைய நாமத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதா?அதுசரி அவருடைய நாமத்தை சொன்னால்(இயேசு நாமத்துக்காரன் என்று) எங்களை நிந்திப்பார்களே!
வேதம்: என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்@ முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.(மத் 10:22)
நான்: பெரும்பாலானோர் நீ கூறிய இந்த விளக்கங்களுக்கு விரோதமாக தானே செய்கிறார்கள்.வெகுசிலர் தானே இதனைப் பின்பற்றுகிறார்கள்?
வேதம்:இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்@ கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது@ அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர்.ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது@ அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.(மத் 7:13,14)
நான்: நான் மதிக்கிற பெரும்பாலானோர் இதை ஏற்பதில்லையே?அவர்கள் வேத ஞானிகளாகவும் இருக்கிறார்களே?அவர்கள் எப்படி தவறு செய்ய முடியும்?
வேதம்: நாங்கள் ஞானிகளென்றும், கர்த்தருடைய வேதம் எங்களிடத்திலிருக்கிறதென்றும் நீங்கள் சொல்லுகிறதெப்படி? மெய்யாகவே, இதோ, வேதபாரகரின் கள்ள எழுத்தாணி அதை அபத்தமாக்குகிறது.(எரே 8:8) வேதத்தைப் போதிக்கிறவர்கள் என்னை அறியாமலுமிருந்து, மேய்ப்பர்கள் எனக்குத் துரோகம் பண்ணினார்கள்(எரே 2:8) ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்@ பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.(1கொரி 1:27)
நான்: இதை நான் சொன்னால் அவர்களோடே நான் போராட வேண்டியிருக்குமே?
வேதம்: வேதப்பிரமாணத்தை விட்டு விலகுகிறவர்கள் துன்மார்க்கரைப் புகழுகிறார்கள்@ வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவர்களோ அவர்களோடே போராடுகிறார்கள்.(நீதி 28:4)
நான்: இன்னும் ஒரு கேள்வி வெறுமனே நீரில் மூழ்கி எழுவதினால் நம் மனதில் என்ன பெரிய மாற்றம் நிகழ்;ந்து விடமுடியும்?கங்கா ஸ்நானம் போல் இதுவும் ஒரு மூட நம்பிக்கை தான் என நண்பன் கூறுகிறானே?
வேதம்: அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது@(1பேது 3:21)
நான்: ஞானஸ்நானம் என்பது பரிசுத்த ஆவியைப் பெறுவது தான்.தனியே நீரில் மூழ்க தேவையில்லையென்று சிலர் போதிக்கிறார்;களே?
வேதம்: அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்.அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்தஆவி அவர்கள்மேல் வந்தார்@ அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித்தீர்கதரிசனஞ் சொன்னார்கள்.(அப் 19:5,6)
நான்: அப்படியானால் ஞானஸ்நானமும் பரிசுத்த ஆவியைப் பெறலும் தனித்தனி நிகழ்வுகள்தாம். ஞானஸ்நானம் பெறாமலே பரிசுத்த ஆவியைப்; பெற்றவர்கள் ஞானஸ்நானம் பெற தேவையில்லையா?
வேதம்: அப்பொழுது பேதுரு: நம்மைப்போலப் பரிசுத்தஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி,கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான்.(அப் 10:47,48)
நான்: ஆனால் வேதத்திற்;கு நான் அப்படியே கீழ்ப்படிந்தால்,எனக்கு பல பிரச்சனைகள் வருமே?நஷ்டங்கள் வருமே?
வேதம்: அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம். (சங் 119:72)
நான்: நான் எடுத்த ஞானஸ்நானம் தவறென்று எனக்கு தெரிகிறது. ஆனால் ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும்,(எபே 4:5) என்று சொல்லப்பட்டிருக்கிறதே?மீண்டும் நான் சரியான ஞானஸ்நானம் பெறலாமா?
வேதம்: அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள்.அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்கவேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான்.அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்.(அப் 19:3,4,5)
நான்: ஓ! வேதத்திலேயே இரண்டாவது ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டிருக்கிறது.அப்படியானால் ஒரே ஞானஸ்நானம் என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாம ஞானஸ்நானத்தை தான் குறிக்கிறதா?
வேதம்: வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.(கொலோ 3:17)அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.(லூக் 24:47)
நான்: அப்படியானால் வேதத்தில் சொல்லப்படாத ஞானஸ்நானம் எடுப்பது தவறு தானோ?ஒருவேளை பிரபலமான பிரசங்கியார்களுக்கு சொப்பனங்கள் மூலமாகவோ பிற வகையிலோ தேவன் வேதத்தை வித்தியாசமாகப் போதித்திருப்பாரோ?
வேதம்: நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.(கலா 1:8)
நான்: அப்படி சொன்ன பவுல் எப்படி ஞானஸ்நானம் கொடுத்தார்?
வேதம்: அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்கவேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான்.(அப் 19:4)அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள்.(அப் 19:5)
நான்: அப்படியானால் உன்னில்(வேதத்தில்) எங்கேயுமே பிதா,குமாரன்,பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானம் கொடுத்ததாகவோ,எடுத்ததாகவோ இல்லை.ஆனால் இயேசு நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டதாகவும் எடுக்கப்பட்டதாகவும் பல இடங்களில் இருக்கிறது.அப்படியானால் அவருடைய நாமத்தில் மட்டும் தான் இரட்சிப்பா?
வேதம்: அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை@ நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.(அப் 4:12)
நான்: அவருடைய நாமத்தில் தான் இரட்சிப்பு,மனந்திரும்புதல்,பாவ மன்னிப்பு என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன்.ஆனால் ஞானஸ்நானம் எடுத்தால் மட்டுமே பரலோகம் போக முடியுமென்றால்,கள்ளன் ஞானஸ்நானம் எடுக்க வில்லையே அவன் எப்படி பரதீசுக்குப் போயிருப்பான்?
வேதம்: ஞானஸ்நானத்தில் அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின் மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடேகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள்.(கொலோ 2:12) அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.(ரோம 6:4)
நான்: அட, ஆமாம். கிறிஸ்துவோடு அடக்கம் என்றால் கள்ளன் தான் உண்மையான ஞானஸ்நானம் பெற்றிருக்கிறான்.நாம் விசுவாசத்தில் செய்யும் செயலை உண்மையிலேயே செய்தது அவன் தான்.அவன் தானே உண்மையிலே இயேசுவோடு மரித்து அவரோடு அடக்கம் பண்ணப்பட்டது!!
நான்: சரி.இவ்வளவு நாளும் இயேசு நாமத்தில் ஞானஸ்நானம் பெறாதவர்கள் என்ன செய்வது?
வேதம்: அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர்போலிருந்தார்@ இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.(அப் 17:30)
நான்: நீ சொல்வதெல்லாம் கேட்பதற்கு என்னவோ நன்றாகத் தான் இருக்கிறது.ஆனால் அதை செயல்படுத்துவதில் தான் அநேக சிக்கல்கள் இருக்கிறது.
வேதம்: என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்.(ஏசா 66:2)
நான்: அப்படியானால் இனி நான் பாரம்பரியத்திற்கோ,மனித ஆலோசனைக்கோ,சுயத்திற்கோ இடம் கொடாமல் நீ(வேதம்)சொல்கிறபடியே செய்கிறேன்.
வேதம்: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்@ உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.(மத் 25:23) உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.(1தீமோ 4:16)
இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்.(1கொரி 2:2)
.jpg)
No comments:
Post a Comment