கிறிஸ்தவர்கள் காதலிக்கலாமா என்னும் மிகப் பெரிய கேள்விக்கான பதிலை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்
கட்டாயமாக முந்தைய பதிவுகளை படித்து விட்டு படிக்கவும். நன்றி.
காதலிக்கலாமா பிரதர்? - பகுதி 1
காதலிக்கலாமா பிரதர்? - பகுதி 2
காதலிக்கலாமா பிரதர்? - பகுதி 4
காதல் என்றால் என்ன? என்றும் ஏன் காதலிக்கக்கூடாது? என்றும் காதல் வருவதற்கான பல்வேறு காரணங்களையும் பார்த்தோம். இனி இந்த பதிவில் இன்னும் இவைகளைப்பற்றிப் பேசுவோம்.
வேதம் தெளிவாக காதலை எதிர்க்கிறது. இன்று உலகம் முழுவதும் காதலின் அடையாளமாக ஒரு அம்பு இதயத்தைப் பிளப்பது போன்ற படத்தை காண்பிக்கிறார்கள். ஆனால் வேதத்தில் இதைப்பற்றி முன்பே குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு குருவி தன் பிராணணை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழத்தீவிரிக்கிறதுபோலும், அவளுக்குப் பின்னே போனான்@ அம்பு அவன் ஈரலைப் பிளந்தது.(நீதி 7:23)
இதயத்தை பிளக்கும் அம்பு வேண்டாம்,இதயங்களை பிணைக்கும் அன்பே வேண்டும்!
இன்று அநேக காதல்கள் இதயத்தை பிளந்து ஆறாத ரணத்தை ஏற்படுத்துகிறது. அவள் பறந்து போனாளே என்று பாடிக் கொண்டிருக்கிறார்கள். தீ சுடும் என்றால் சுடாது என்று தொட்டு சுடுகிறது என்கிறார்கள். உடல் காயம் உலகிற்குத் தெரியும். ஆற்ற மருந்துண்டு. உளக்காயம் உள்ளுக்குள் இருக்கும். மருந்தில்லை. ஆனால் வேதம் சொல்கிறது,இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார்.(சங் 147:3) அம்பு பிளந்த இதயத்தை குணமாக்க அன்பு கொண்ட நேசர் இருக்கிறார்…
சரி விஷயத்திற்கு வருவோம்……. காதலை மேற்கொள்ளுவதெப்படி என்கிற தலைப்பிற்குள் நுழையப் போகிறோம். இன்றைய கிறிஸ்தவ இளைஞர்களில் பெரும்பாலானோரின் கேள்வி இது தான். காதல் தவறென்பதை ஒத்துக் கொள்கிறோம். ஆனால் அடிக்கடி ஏற்படும் காதல் உணர்வை தவிர்ப்பது எப்படி? சிலரைப் பார்த்தால் உடனே என் மனது பட்டாம்பூச்சியாய் சிறகடித்து விடுகிறதே? நான் எவ்வளவு போராடினாலும் இதை என்னால் மேற்கொள்ள முடியவில்லையே? சுpல நேரங்களில் அதை நான் மேற்கொண்டாலும் பெரும்பலான நேரங்களில் மேற்கொள்ளப்பட்டுவிடுகிறேனே? போன்ற கேள்விகள் அநேகருடைய உள்ளத்தை குடைந்து கொண்டு தான் இருக்கிறது.
காதல் உணர்வு இயற்கையாய் தேவன் கொடுத்ததால் காதல் உணர்வு வருவதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் அது நம்மைப் பாதிக்காத வகையில் அதைக் கைளாள்வதில் தான் நமக்கு கவனம்; வேண்டும். காதல் உணர்வு நமக்கு ஏற்படுவது நமது தவறல்ல. ஆனால் அது நம்மை மேற்கொள்ள அனுமதிப்பது தான் மிகப் பெரிய தவறு. உலகில் நாம் வாழும் வரையில் பாவத்தூண்டல்கள் இருக்கத்தான் செய்யும். தூண்டலை முறியடிப்பதில் தான் நமது பங்கு இருக்கிறது. எனவே காதல் உணர்வு வரும்போது அஞ்சவேண்டியதில்லை. அதை லாவகமாய் கையாளாத் தொடங்கிவிட்டால் போதுமானது.
எவ்வாறு இந்த காதல் உணர்ச்சியை மேற்கொள்ளலாம்? என்பதைப் பார்க்கலாம். ஜெபம் செய்தால் காதல் உணர்விலிருந்து வெளியே வந்து விடலாம்.100 சதவிகித உண்மை தான். ஆனால் நீங்கள் ஜெபம் செய்யுங்கள் தேவன் உங்களுக்கு விடுதலை தருவார் என்று ஒரே வரியில் நான் விடை தரப் போவதில்லை. பாவத்திலிருந்து விடுதலை பெற ஜெபம் தான் தீர்வு என்பது தான் எல்லா கிறிஸ்தவர்களுக்கும் தெரியுமே. பின்னே ஏன் நாம் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறோம். ஜெபத்தோடு கூடிய நமது பிரயாசத்தையும் தேவன் எதிர்பார்க்கிறார்(நீதி 14:23). நன்றாக கவனிக்கவும்,ஜெபத்துடன் கூடிய பிரயாசம். ஜெபமும்,தேவகிருபையும் இல்லையேல் நம்முடைய பிரயாசம் விருதா(சங்127:1).
சரி காதலை மேற்கொள்ள நாம் என்ன தான் செய்ய வேண்டும்? அவற்றை சில தலைப்புகளின் வாயிலாக ஆராயலாம். அய்யோ மறுபடியும் தலைப்புகளா? என்று தலையில் அடிப்பது தெரிகிறது. வேறு வழியில்லை. பொறுத்துக்கோங்க…
(1)பொறுப்புணர்வு:
பொறுப்புணர்ச்சி காதலை தவிர்ப்பதற்கான முக்கியமான வழி. இன்னொரு வகையில் சொல்லப் போனால் இன்று அநேக வாலிபர்கள் காதலிக்காமல் இருப்பதற்கான காரணமே பொறுப்புணர்வு தான். தன்னைப் பற்றியும் தன் குடும்ப சூழ்நிலைகள் பற்றியும், தன்னை பற்றிய மற்றவர்களின் மனநிலையையும் உணர்ந்த ஒருவன் காதலிப்பது அரிது. பொதுவாக வாலிபர்கள் காதல் செய்யும் பருவம், அவர்கள் குடும்ப சுமைiயை உணர்ந்திருக்கும் பருவம். பெற்றோர் தனியாக தூக்கிக் கொண்டிருந்த சுமையைக் கொஞ்சம் கைமாற்றும் பருவம். பெற்றோரும் “அப்பாடா இவ்ளோ நாள் கஷ்டப்பட்டாச்சு..இனி நம்ம பையன் கூட மாட ஒத்தாச பண்ணுவான்”என்று பெருமூச்சு விடும் பருவம். ஆனால் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய இந்த பருவத்தில் தான் பாழாய்ப் போன காதல் வந்து தொலைக்கிறது. மொத்த பொறுப்புணர்வையும் குடும்;பத்தின் மீதுள்ள அக்கறையையும் கவிழ்க்கவென்றே வருகிறது. இதை உணர்ந்து கொண்டால் காதல் காத தூரத்திலேயே நின்று விடும். எனக்கு தெரிந்த ஒரு வாலிபன் அடுத்தடுத்து திருமணத்திற்காக காத்திருக்கும் மூன்று தங்கைகளை வைத்துக் கொண்டு ஒரு பெண்ணைக் காதலித்து கரம்பிடித்து கம்பிநீட்டிவிட்டான்.தங்கைகள் பரிதாபமாக முழித்துக் கொண்டிருக்கிறார்கள். பையன் காப்பாற்றுவான் என்றிருந்த அப்பாவுக்கோ பேரிடி. தன் குடும்ப சூழ்நிலையையும், தன் குடும்பம் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் நினைத்துப் பார்க்கும் யாரும் காதலிக்கத் தயங்குவார்கள். பெண்களுக்கும் பெரிய பொறுப்புணர்வு இருக்கிறது. பின்னே சும்மாவா? வாலிப வயதில் பெண் பிள்ளை பொறுப்பாக குடும்பத்தை கவனித்தால் எவ்வளவு இனிதாக இருக்கும். நமக்கு இந்த உலகம் கொடுத்திருக்கும் பெரிய பொறுப்புணர்வை யோசித்தாலே காதலை தவிர்த்து விடலாம். பொறுப்புள்ளவர்களைத் தான் இவ்வுலகம் மதிக்கும் என்பதை கொஞ்சமும் மறந்து விட வேண்டாம்(நீதி 22:29).
(2)தொலைநோக்குப் பார்வை:
வருங்காலத்தை கணிக்கும் தொலைநோக்கு பார்வை இருந்தால் காதல் கசந்து விடும். என்ன புரியவில்லையா? வெயிட்……விளக்குகிறேன்… காதலிக்கும் வாலிபர்கள் தங்களை ஹீரோக்களாகவும் காதல் பெண்ணின் தந்தையை வில்லன்களாகவும்(சிலரை காமெடி பீஸ்களாகவும்) பாவித்துக் கொள்கிறார்கள். அவர்கள் ஆத்மார்த்தமாய் நேசிக்கும் சினிமாவும் அவர்களுக்கு அதை தான் கற்றுக் கொடுக்கிறது. ஆனால் இவர்களுக்கு புரிய மறுக்கும் விஷயம், ஒருநாள் இவர்களுக்கும் திருமணம் ஆகும். இவர்களுக்கும் அழகான பெண்பிள்ளை பிறக்கலாம்(யாரு கண்டா?). அப்போது இவர்கள் வில்லன்களாகவோ காமெடி பீஸ்களாகவோ மாறிவிடுவார்கள். ஹீரோவாக இவர் பெண்ணை ஜொள் விடும் போக்கிரி இருப்பான். அப்போ யாரிடம்; புலம்பியும் பிரயோஜனமில்லை. காலம் போற வேகத்துல இதுக்கெல்லாம் ரொம்ப நாள் ஆகாது பாஸ்…(யாருக்கு தெரியும் இப்போ வில்லனா இருக்கிற ஒங்க ஆளோட அப்பாவும் முன்னாள் ஹீரோவா இருந்திருக்கலாம்;)
அப்பா அடித்ததின் காரணம் நமக்கு புரியும்போது நமக்கு இரு பையன்கள் இருப்பார்கள்!!
எனக்கு தெரிந்த ஒரு பெண் ஒரு பையனோடு ஓடிப் போய்விட்டாள்.அவள் அக்காவும் ஓடிப் போனார் என்று கேள்விப்பட்டேன். பிறகு தான் தெரிந்தது,அவர்களைப் பெற்றெடுத்த அம்மாவும் ஓடி வந்தவர்கள் தான் என்று. கொஞ்சம் அந்த அம்மாவின் நிலையை யோசித்துப் பாருங்கள். தான் ஓடி வரும்போது தன் தாயார் அனுபவித்த சோகத்தை, அவமானத்தை இருதரம் அனுபவித்து விட்டார். எவ்வளவு நாள் கழித்து பலனை அனுபவிக்கிறார்கள் பார்த்தீர்களா? பெற்றோரையும் மற்றோரையும் வேதனைப்படுத்தி நாம் நிம்மதியாக வாழ்ந்திட முடியுமா?நீங்கள் காதல் செய்கிறீர்களே! நாளை உங்கள் பிள்ளைகள் யாரையாவது காதலித்து விட்டு உங்களை உதாசினப்படுத்தினால் என்ன செய்வீர்கள்?
நாம் விதைப்பதை தான் அறுப்போம்(கலா 6:7)என்பதையும், தெய்வம் நின்று கொல்லும் என்பதையும்(வெளி2:27) மறந்து விடக்கூடாது. நம்முடைய எதிர்காலத்தைப் பற்றிய அக்கறை நம்மை காதல் செய்ய விடாமல் தடுக்கப் போதுமானது.
(3)தேவ அன்பு:
தேவ அன்பு நமக்குள் நிறைவாய் இருக்கும்போது, நிச்சயம் யாரையும் காதலிக்க தோணாது. யாரையாவது ஒருவரைத் தானே முழுமையாய் நேசிக்க முடியும்?(லூக்கா16:13) ஒருவன் தேவனிடத்தில் அன்பாயிருந்தால் அவரது அன்பு மட்டும் போதும் என்பதை உணர்ந்து கொள்வான். நம்மை நேசிப்பதை உயிரையே கொடுத்து நிரூபித்த தேவன் அவர். அவர் மேல் நாம் வைத்திருக்கும் அன்பு காதலை மட்டுமல்ல எல்லா பாவ உணர்வுகளையுமே நம்மை விட்டு விலக்கிவிடும். வேதம் சொல்கிறது அவர் மேல் அன்பாயிருக்கிறவன் அவரது கற்பனையைக் கைக்கொள்வான்(யோவான்14:15). அவரது வசனத்தின்படி வாழ்கிறவன் அவர்மேல் அன்பு வைத்திருக்கிறான் என்றால், 1தீமோத்தேயு 5:2 ன் படி பாலிய ஸ்தீரிகளை சகோதரிகளாகப் பாவிக்க வேண்டும். யோபு 31:1ன் படி கன்னியின் மேல் நினைவாயிருக்கக் கூடாது.மத் 5:28ன் படி பெண்ணை இச்சையோடு பார்க்கக்கூடாது. ஏசாயா2:6 ன் படி அந்நிய புத்திரரின் மேல் பிரியமாயிருக்க்ககூடாது போன்ற வசனங்களை கைக்கொள்ள வேண்டும். அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் என்று பாடுவதில் மட்டுமல்ல. அவரது வசனங்களைக் கைக்கொள்வதில் தான் அவர் மேல் நாம் வைத்த அன்பை விளங்கப்பண்ண முடியும். என்னை நேசிக்கிறாயா? என்று இயேசு நம்மைப் பார்த்துக் கேட்க, என்னை நேசிக்கிறாயா என்று நாம் யாரையோ பார்த்து கேட்பது அவரை நோகடிக்கத்தானே செய்யும்? தேவன் மேல் நாம் வைக்கும் அன்பு நிச்சயமாக நம்மை காதலிலிருந்து பாதுகாக்கும்.
(4)சுறுசுறுப்பு:
சுறுசுறுப்பு என்றவுடன் எப்போதும் ஓடியாடிக்கொண்டிருப்பது மட்டுமே நம் நினைவுக்கு வரும். ஆனால் அதுமட்டுமல்ல, வேகமாய் இயங்கும் மனமும் கூட சுறுசுறுப்பானது தான். சரி இது எப்படி காதலுக்கு பொருந்தும் என நீங்கள் கேட்பது கேட்கிறது. விவரமாகச் சொல்கிறேன், உடலும் மனமும் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தால், அங்கே காதல் உணர்வு தோன்றுவதற்கான காரணமே இருக்காது. காதலிக்க நேரமிருக்காது. தாங்கள் தொடர்பு கொள்ளும் இதயம் பிஸியாக உள்ளது என்ற செய்தியோடு காதல் எண்ணம் வாசலிலேயே விரட்டியடிக்கப்படும். இன்று பொழுது போக்கிற்காக காதல் செய்பவர்கள் அநேகர். நேரம் போகவில்லை என்பதற்காக, செல்போனில் வெட்டி அரட்டை செய்பவர்கள் பலர்.
நேரம் போதவிpல்லையென்று பலர் ஓடிக் கொண்டிருக்க, நேரம் போகவில்லையென்று கூறுவதேன்!!!
எப்பொழுதும் மூளையை பிஸியாகவே வைத்திருப்பவனிடம் காதலின் ஜம்பமெல்லாம் எடுபடாது. வாழ்வின் கோரமுகத்தை மறக்கவும் சிலர் காதலிக்கிறார்கள். எப்போதும் தங்களை பிஸியாக வைத்துக் கொள்ள காதலிப்பவர்களும் உண்டு. இவ்வகை காதலிலிருந்து விடுபடுவது மிக எளிது. மனதில் ஏதாவதொன்றை ஓடவிட்டுக் கொண்டே இருப்பது, காதலைப்பற்றிய நினைவை கட்டுப்படுத்தும்;.
ஏற்கனவே நிரம்பியிருக்கும் பாத்திரத்தை புதிதாக எதுவும் நிரப்பமுடியாது.
மிக முக்கியமான பரீட்சை, பெற்றோர் உடல்நலக்குறைவு, போட்டி போன்ற நேரங்களில் காதலின் நினைப்பு வராமல் போவதற்கான காரணமும் இதுதான். ஏதோ ஒன்று ஏற்கனவே உள்ளே இருக்கும்போது ஏதோ ஒன்று புதிதாக நுழைவது சாத்தியப்படாது. வாலிபர்களின் மூளை மிகவும் பிரஷ்ஷாக இருக்குமாம்(உண்மை தாங்க!!).எனவே அதற்கு நாம் சரியாய் தீனி போடவில்லையென்றால், அது கிடைத்ததை தின்று திருப்திப்பட்டுக்கொள்ளும்.
மனதில் அசைபோட மேட்;டரே இல்லையென்றால், பிரச்சனையே இல்லை. நான் உங்களுக்கு ஒரு ஐடியா தாரேன். இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.(சங் 1:2) இரவும் பகலும் வேதத்தில் தியானமாயிருந்து பாருங்கள். வேதத்தையும் அறிந்து கொள்ளலாம். காதலையும் விரட்டிவிடலாம். பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்@ ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.(1கொரி 9:24) நம்முடைய ஒரே நோக்கம் பரலோகமாக இருந்தால், வேறெந்த சிந்தையும் நம்மை கவிழ்க்க முடியாது.
சுறுசுறுப்போடு ஓடுவோம்;. தேவன் உதவி செய்வார்.
(5)இச்சையடக்கம்:
காதலின் மூல காரணம் இச்சை தான் என்பது நாம் அறிந்ததே. இச்சையை கட்டுப்படுத்த நாம் கற்றுக்கொண்டால், காதலின் வேருக்கே வேட்டு வைத்துவிடலாம். இச்சை காதலுக்கு மட்டும் வேர் அல்ல, எல்லா பாவத்திற்கும் மூல காரணம் இச்சை தான்(யாக்1:15). எனவே இச்சைகளுக்கு இடங்கொடாதலே உத்தமம். இச்சையை எதிர்த்து போராடுவது சற்று கடினம் தான். இச்சை எண்ணங்களை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்துவது பலனளிக்கும். ஏனென்றால் இச்சையானது நாளுக்கு நாள் வளரக்கூடியது. நமக்குள்ளிருந்தே தோன்றி, நம்மையே ஆட்டிப்படைக்கும் வல்லமை உள்ளது இதற்கு(யாக்4:1). இந்த இச்சை நம்மை இழுக்க முயற்சித்துக் கொண்டே இருக்கும்(2தீமோ3:6,யாக் 1:14). நாமும் இதற்கெதிராய் ஒரு எதிர்விசையை செலுத்திக் கொண்டேயிருந்தால் மட்;டுமே, அதை மேற்கொள்ள முடியும்.
முறையற்ற ஆசையையே இச்சை என நாம் முறைப்படுத்தலாம். ஆசையை ஒழிப்பதென்பதொன்றும் சாமானிய காரியமில்லை. (ஹி… ஹி…புத்தரே ஆசையை ஒழிக்க வேண்டுமென்று ஆசை தானே பட்டார்.) எனவே தேவனிடம் கேட்கும்போது இச்சையை மேற்கொள்ள உதவி செய்வார். தேவனுக்கு கீழ்ப்படிய முயற்சித்தால் இச்சையின் இம்சையிலிருந்து தப்பலாம்(1பேதுரு1:14,15)
(6)முதலிலேயே அழித்தல்:
முதலிலேயே அழித்தல் முற்றும் சிறந்த முறை. வருமுன் விழிப்பாயிருப்பது, காதலை தவிர்க்க உதவும் முக்கிய வழிமுறை. வேதம் சொல்கிறது,என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?(யோபு 31:1) நினைவாயிருப்பதே பாவம் என்று வேதம் சொல்கிறது. நினைவாகவேயிருப்பது தானே காதலின் முதல் அறிகுறி. காதலர்கள் தன்னாலே ரோட்டில் சிரித்துக் கொண்டு அலைவதை நம்மால் பார்க்க முடியும். சிலர் தனியாக வாயில் ஏதோ முணுமுணுத்துக் கொண்டும்; செல்வார்கள்(பார்க்க செம காமெடியா இருக்கும்). எப்போதும் நினைவாயிருப்பதே இதற்கு காரணம். நண்பன் ஒருவன் என்னிடம் சொன்னான்,“எனக்கு எப்பவும் அவ ஞாபகமாவே இருக்குடா, அவள காதலிச்சுருவேனோனு பயமாயிருக்குடா”. இப்படி நினைவு வரும்போதே அதை மேற்கொண்டு விட்டால், மேற்கொண்டு காதல்,கீதல் எல்லாம் வராது. அந்த நினைவின் இன்பத்தை நாம் லயிக்க ஆரம்பித்து விட்டால்,அதோகதி தான். அந்த நினைவு வரும்போதே நாம் சுதாரித்துவிட வேண்டும்.
“ஸாரி பாஸ் நான் இதெல்லாம் தாண்டி ரொம்ப நாளாச்சு”என்று ஒருசிலர் சொல்வது கேட்கிறது. ஒன்றும் கெட்டுப் போய் விடவில்லை. நாம் பாவத்தின் எந்த நிலையிலிந்தாலும் அதை அறிந்து கொண்ட உடனேயே அதிலிருந்து விடுபடுவது தான் எளிது. ஏனென்றால் பாவம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகும். அது பூரணமாகிக்கொண்டிருக்கும்(யாக் 1:14). எனவே நாளை இந்த பாவத்தின் வளர்ச்சி இன்றை விட அதிகமாக இருக்கும். நாளை மறுநாள் இதன் பிடி இன்னும் இறுகும். தெரிந்த அல்லது கேள்விப்பட்ட உடனேயே காதல் எண்ணத்தை அழித்துவிட்டால், அதன் வளர்ச்சியை தடுத்துவிடலாம். இல்லையென்றால் அதன் வளர்ச்சியின் வீரியத்தோடு போராட வேண்டியிருக்கும். புரியாத மாதிரி முழிப்பது போல் தெரிகிறது. புரியும்படி, சுருக்கமாக சொல்வதென்றால்,
இன்று திருந்துவது நாளை திருந்துவதை விட நல்லது, எளிதானது!.
எனவே காதல் உணர்வை உடனே அல்லது முதலிலேயே அழித்துவிட்டால் அது நம்மை பாதிக்காது.
(7)முற்றிலும் அழித்தல்:
காதல் உணர்வை அழிக்க வேண்டுமென்று முடிவு செய்துவிட்டால், அதை முற்றிலும் அழிப்பது தான் உத்தமம். அவளை(னை)ப் பற்றி நினைவு ஏற்படுத்துகிற எல்லா காரியங்களையும் துறந்தால் தான், அவளை(னை) துறக்க முடியும். ஏனென்றால் மனித மனம் குரங்கு மாதிரி. அங்குமிங்கும் தாவிக் கொண்டே இருக்கும். அப்பாடா காதலனை மறந்தாச்சு என்று நாம் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும் போதே அவனோடு பழகியதை ஞாபகப்படுத்தும் ஏதோ ஒன்று கண்ணில் பட்டவுடன், பழைய குருடி, கதவ திறடி கதையாகிவிடும். சிலர் காதலை கைவிட்டாலும் காதலி(லன்) அனுப்பிய எஸ்.எம்.எஸ். அழிக்க மனம் வராது. மிச்சம் வைப்பது நினைவை புதுப்பிக்கும். புதிப்பிக்கப்பட்ட நினைவு பழையதை விட வீரியமாக செயல்படும் என்பதை மறந்து விடக்கூடாது. நான் கல்லூரியில் படிக்கும்போது என் மதிப்பிற்குரிய பேராசிரியை கற்றுத் தந்ததில் மிக முக்கியமானது,“எந்த பாவத்தை விட்டொழித்தாலும் முழுவதுமாக விட்டுவிட வேண்டும். நினைவுச் சின்னங்களை எல்லாம் அழித்துவிடவேண்டும்.மீண்டும் அதே பாவத்தில் விழாமல் இருப்பதற்கு ஒரே வழி அதுதான்”. அரைகுறை எப்பொழுதுமே ஆபத்தானது தான். சினிமா பார்த்தால் காதல் உணர்வு வருகிறதென்றால் டி.வி.க்கே முழுக்கு போட்டுவிடுங்கள். நண்பன் உசுப்பேற்றி நினைவுப் படுத்திக்கொண்டேயிருந்தால் நண்பனுடன் டூ போட்டு விடுங்கள்.கதை புத்தகம் தான் காரணமென்றால் விட்டுவிடுங்கள். கருத்து சொல்லும் பல கதை வேதத்தில் உண்டு.காசு மிச்சம்
முயற்சி செய்வோம் அவர் உதவி செய்வார்.
(8)நல்லவர்களின் ஐக்கியம்:
நம்மை சுற்றியுள்ள சூழ்நிலை நம்மை பாதிக்கிறதென்பதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். எப்போதும் நல்லவர்களோடு (ஆலயத்தில்,பள்ளியில், அலுவலகத்தில்) இருக்கும் பட்சத்தில் நாம்; செய்யும் சிறு தவறும் நமக்கு பெரிதாக தெரிந்து திருந்த வாய்ப்பாகும்.ஆனால் கெட்ட நண்பர்களின் சகவாசமோ பெரியதையும் சிறிதாக்கி காட்டும்.
பிசாசுக்கும், காதல் துணைக்கும் அடுத்து காதலின் மிக முக்கிய காரணம் நண்பன் தான். “அவ உன்ன தாண்டா பாக்குறா” என்பதில் இருந்து “கூட்டிட்டு வந்துட்றா, நா பாத்துக்கிறேன்” என்பது வரை அவர்களின் பாச(!)பங்கு மிக அதிகம்.நண்பனை குழியில் தள்ளி வேடிக்கை பார்ப்பதில் கொள்ளை இன்பம் போலும்.
இலட்சியவாதிகளோடும், முன்னேறத்துடிப்பவர்களோடும், தேவ பிள்ளைகளோடும் உங்கள் உறவு இருந்தால், நீங்கள் சாதிக்கலாம். உங்கள் நண்பன் பிக்காளி என்று தெரிந்தால் திருத்த முயலுங்கள்.
(9)ஜெபம்:
இது மிக முக்கியமானது. மேலானது. நான் ஏற்கனவே சொன்னது போல, மேற்கண்ட எல்லா பிரயாசங்களையும் ஜெபத்துடன் செய்தால், காதலை எளிதில் வெல்லலாம். ஜெபத்தைப் பற்றி விரிவாய் சொல்ல வேண்டியதில்லை. உங்களுக்கே தெரியும். இயேசுவிடம் கேட்டால் கிடைக்கும். மனம் விட்டு கேளுங்கள். ஜெபத்தில் வளர வளர தானாகவே வெறுப்பு வந்து விடும். மேற்கண்ட வழிமுறைகள் மூலம் காதலை மேற்கொள்ள வாழ்த்துக்கள்.
யாரை காதலிக்கலாம்?
ஏற்கனவே காதலித்துக் கொண்டிருக்கும் நான் என்ன செய்வது?
நன்றாகத் தெரிந்தவர்கள் காதலை சொன்னால் என்ன செய்வது?
நட்பு காதலாகலாமா?
தொடர்ந்து பேசுவோம்….

.jpg)
.jpg)
.jpg)
No comments:
Post a Comment