(நண்பன் அமல்ராஜ் அனுப்பியது)
உலகமே காத்திருக்க
ஊழியனாய் நீ வந்தாய்
அரசாள நீ போகின்றாய் என்று
அகிலமே நினைத்திருக்க
அயலானாய் நீ நின்றாய்
அனைவரையும் அன்பு செய்ய
மாளிகையில் நீ பிறப்பாய் என்று
மனிதர்களெல்லாம் மகிழ்ந்திருக்க
மாட்டு தொழுவத்தில் நீ பிறந்தாய்
மனிதத்திற்கு மாண்பளிக்க
எதற்கு நீ பிறந்தாய் என்று
ஏதேதோ கேள்வி நாங்கள் கேட்க
எங்கள் முன்னே நீ நின்றாய்
எங்களுக்கு புது வாழ்வளிக்க
என்ன உனக்கு தருவது என்று
எண்ணி நாங்கள் தவித்து நிற்க
எங்கள் வாழ்வில் நீ வந்து
ஏற்றுக் கொண்டாய் எங்களை முழுக்க

No comments:
Post a Comment