Monday, 23 March 2015

காற்றில்லாமல் வாழலாம்

            

காற்றில்லாமல் வாழலாம் உம் பாசம் என்னும் சுவாசத்தால்

தண்ணீரில்லாமல் வாழலாம் நீர் ஜீவ ஊற்றாய் இருப்பதால்

வீடுமின்றி வாழலாம் உம் செட்டை எந்தன் அடைக்கலம்

உணவுமின்றி வாழலாம் உம் வார்த்தை எந்தன் அப்பமே

கண்ணில்லாமல் வாழலாம் உம் தரிசனம் நான் காண்பதால

காதில்லாமல் வாழலாம் உம் உம் எண்ணம் எனக்கு புரிவதால்

மூளையின்றி வாழலாம் உம் சித்தமே நான் செய்வதால்

உருவமின்றி வாழலாம் என்னை உள்ளங்கையில் வரைந்ததால

துணையில்லாமல் வாழலாம் ஒரு குறையில்லாமல் பார்ப்பதால்

உறவில்லாமல் வாழலாம் உம் அரவணைப்பு கிடைப்பதால்

பணமுமின்றி வாழலாம் நீர் தினமும் என்னை காப்பதால்

எதுவுமின்றி வாழலாம் நீர் எல்லாம் எனக்கு தருவதால்

நீருமின்றி வாழுவேனோ அன்பே என் அன்பே

நினைவுமின்றி வாழுவேனோ அன்பே என் இயேசுவே


நான் எழுதிய பாடலின் வரிகள்

No comments:

Post a Comment